கடலூர், மயிலாடுதுறை தொடங்கியது மழை.காலை முதல் பிற பகுதிகள்.நாளை மேற்கு முடிய கனமழை.உங்களுக்கு எப்படி?
2022 அக்டோபர் 28 வெள்ளிக்கிழமை அதிகாலை நிலவரம் வங்க கடலில் ஒன்று கிலோமீட்டர் உயரம் முதல் நான்கரை கிலோ மீட்டர் உயரம் வரைக்கு இடைப்பட்ட போதிலும் நீடித்துக் கொண்டிருந்த காற்று சுழற்சி தமிழக கரையை நெருங்கி விட்டது. நாளை டெல்டா மாவட்டங்களை ஒட்டி வந்து தென்தமிழகம் வழியாக அரபிக்கடல் நகரும். இதன் காரணமாக தமிழகத்தில் தற்பொழுது கடலோரம், மயிலாடுதுறை மாவட்டத்திலும் சிதம்பரம் உள்ளிட்ட கடலூர் மாவட்டத்திலும் தொடங்கக் கூடிய மழை. நாகப்பட்டின மாவட்டத்திலும், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டத்திலும், வட கடலோர, மாவட்டங்களிலும் மழைப் பொழிவு, மெல்ல வெயில் வந்ததும் காலைக்குள் அல்லது மதியம் 11:00 மணிக்குள் அல்லது 12:00 மணிக்குள் மழை பொழிவு தொடங்கும். பிறகு படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் மேக உற்பத்தி தொடங்கும். தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், கர்நாடக எல்லையோர மாவட்டங்கள் வரைக்கும் ஆங்காங்கு ஆங்காங்கு மழைப்பொழிவைக் கொடுக்கும்.நாளை இந்த நிகழ்வு தெற்கு நோக்கி வந்து மேற்கு நோக்கி நகர்கிறது காரணத்தினால் நாளை மதியத்தில் இருந்து மழை பொழிவு கூடும்.நாளை மாலை, இரவு தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் நல்ல மழை கிடைக்கும். அனைத்து மாவட்டங்களுக்கு மழை பொழிவு கிடைக்கத் தொடங்கும்.31ம் தேதியில் இருந்தது அடுத்த நிகழ்வான தமிழகத்தில் பரவலாகக் கனமழை கிடைக்கும். 5 ம் தேதியால் அந்த நிகழ்வால் மழைப் பொழிவு. விரிவான அறிக்கையைப் பார்த்துப் பயன்பெருக.
2022 அக்டோபர் 28 வெள்ளிக்கிழமை அதிகாலை நிலவரம்
