கொட்டப் போகும் கோடை மழை. உங்களுக்கு எப்படி?

0

🌦 வணக்கம் – செல்வகுமாரின் அதிகாலை வானிலை அறிக்கை

📅 தேதி: 2025 மே 8 – வியாழக்கிழமை

📍 நேற்றைய மழைப் பதிவு

  • சேலம் மாவட்டம் பழமருத்துப்பட்டி – 12 செ.மீ

  • ஓமலூர் – 7 செ.மீ

  • சேலம் – 4 செ.மீ

  • ஏத்தாப்பூர் C.R.I – 25 மி.மீ

  • பல்வேறு இடங்களில் 5 முதல் 8 செ.மீ வரை மழை பதிவுகள் உள்ளன.

🌧️ மழை பாதித்த மாவட்டங்கள்

  • டெல்டா பகுதிகள்: கும்பகோணம் முதல் மன்னார்குடி வரை

  • மத்திய மாவட்டங்கள்: அரியலூர், பெரம்பலூர், திருச்சி

  • மேற்கு தொடர்ச்சி மலை அருகில்: மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர்

  • வடகடலோரம்: செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர்

  • தெற்கு மாவட்டங்கள்: தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, நாகப்பட்டினம், காரைக்கால்

🔮 எதிர்பார்க்கப்படும் வானிலை (மே 9 – மே 15)

  • மே 9 முதல் 12 வரை கடலோர மாவட்டங்களில் பரவலான கனமழை.

  • மே 12 முதல் 15 வரை:

    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும்

    • கேரள எல்லையோர மாவட்டங்களிலும்

    • ஆந்திர, கர்நாடக எல்லையோர பகுதிகளிலும்
      மிக கன மழை பெய்ய வாய்ப்பு.

⚠️ விவசாயிகளுக்கு அறிவுரை

  • எள், நிலக்கடலை, உளுந்து போன்ற பயிர்கள் அறுவடை செய்யத் தயாராக இருக்கவும்.

  • அறுவடைகளை விரைவில் முடித்து பாதுகாப்பாக சேமிக்கவும்.











Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog