இன்று மழை எங்கே?உங்களுக்கு எப்போது?பருவ மழை தீவிரம் எப்போது?
வணக்கம். செல்வகுமாரின் இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் இருபத்தி நான்கு, வியாழக்கிழமை இரவு நிலவர, ஒரு நிமிட ஆய்வறிக்கை, அதிகாரப்பூர்வ அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை அறிக்கையை பார்க்கவும்.
வங்கக் கடலில் இருந்து, தரையேறிய காற்று சுழற்சி பகுதியானது, காற்று சுழற்சியாக, தற்பொழுது தமிழக தரை மீது, கீழடுக்கு சுழற்சியாக நீடித்துக் கொண்டிருக்கிறது இது ஒட்டுமொத்த தமிழக தலைமை மீதும், பரவி இருக்கிற நிலையில, வட உள் மாவட்ட பகுதியை, மையமாகக் கொண்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், மற்றும், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு, மழைப்பொழிவை கொடுத்து வருகிறது. ஆங்காங்கே, ஆங்காங்கே, ஒதுக்கி, ஒதுக்கி, இது, இம்மாத இறுதி வரைக்கும், தெற்கு நோக்கியும், மேற்கு நோக்கியும் நகர்ந்து, ஆங்காங்கே, ஆங்காங்கே மழைப்பொழிவு கொடுக்கும். ஓரிடத்திற்கு உறுதியாக மழை பொழியும் என்று சொல்ல முடியாது. ஆனால், பெய்யாது என்றும் சொல்ல முடியாது. வெப்பம் எங்க உயருகிறதோ, அந்த இடத்திலே இந்த காற்று சுழற்சி மழை பொழிவை கொடுக்கும். வெப்ப சலன மழையாக. அடுத்த நிகழ்வு, Myanmar செல்லக்கூடிய நிகழ்வு, திசைமாறி தமிழகத்தை நோக்கி வந்து, டிசம்பர் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு தேதிகள்ல, கடலோர மாவட்டங்களுக்கு மிதமான முதல், சற்று கனமழையை கொடுக்க வாய்ப்பிருக்கிறது. அனைத்து மாவட்டங்களுக்கும், டிசம்பர் ரெண்டு, மூன்று, நான்கு தேதிகள்ல மழைப்பொழிவு. பனி விலகிய பிறகு, ஐந்தாம் தேதிக்கு மேல் வலுவான நிகழ்வு, ஏழாம் தேதியிலிருந்து, தீவிர நிகழ்வோ, பதினைந்தாம் தேதி, அடுத்த தீவிர நிகழ்வோ, இணைந்திருங்கள், நன்றி
