மழை,வட கடலோரம் தொடங்கியது.டெல்டா உட்பட பிறமாவட்டங்கள் நாளை காலை முதல் தொடங்கும்.அக் 29 முதல் தீவிரம்
2022, அக்டோபர் இருபத்தி ஏழு, வியாழக்கிழமை இரவு அறிக்கை. எதிர்பார்த்தது போலவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்ல, இன்றைக்கு காலை தொடங்கிய மழை, மதியத்துல வலுத்து பெய்தது. பிறகு, பொழுது ஓய்ந்திருக்கிறது. மீண்டும் நள்ளிரவிலிருந்து, மழை தொடங்கும். நள்ளிரவுக்கு பின், அதிகாலையில், கண்டிப்பாக, சென்னையில், தொடங்கக்கூடிய மழை, பிறகு, படிப்படியாக, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு தொடங்கி, காலையில, டெல்டா மாவட்டங்களுக்கு தொடங்கி, மதியத்திற்குள், அனைத்து மாவட்டங்களிலும், நாளை மழைப்பொழிவு, ஆங்காங்கே, ஆங்காங்கே இருக்கும். வடகிழக்கு காற்றும் சற்று உணரக்கூடிய அளவிலே, வலுத்திருக்கும் நாளை. நாளை மறுதினம், 29 தேதி, வலுவான வடகிழக்கு காற்று நுழைஞ்சு, நல்ல மழையைக் கொடுக்கும். 29 தேதி, சனிக்கிழமை மதியம், டெல்டா மாவட்டங்கள், மற்றும் தென் மாவட்டங்கள்ல, கனமழை காத்திருக்கிறது. பிறகு, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்ல வழுக்கும். முப்பத்தி ஓராம் தேதி, அடுத்த நிகழ்வு வந்து,அதைவிட கூடுதல் மழைப்பொழிவை, தமிழகத்திற்கு கொடுக்கும். 31 தேதியிலிருந்து, 5 தேதி, 6 தேதி வரை, நல்ல மழை இருக்கிறது. அதுக்கு அடுத்த நிகழ்வு, பன்னிரண்டாம் தேதி வரை நீடிக்கும், அடுத்தடுத்த நிகழ்வு காரணமாக, 12 தேதி வரை, மழை இருக்கிறது. இடையிலே ஒரு நாள், லேசாக தீவிரம் குறைந்து இருந்தால் தவிர,மழைப்பொழிவா அடுத்தடுத்த நிகழ்வுகளால் இருக்கிறது. தொடர்ந்து அறிக்கையில் இணைந்திருங்கள்.
