பரவலாகி தொடரும் காற்று சூழற்சி மழை. அக் 20,21இல் தொடங்கும் பருவ மழை உங்களுக்கு எப்படி?

0

தொடரும் மாலை இரவு காற்று சுழற்சி மழை.தொடர்ந்து பருவ மழை.இடைவெளி எப்போது?





இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, October 16, ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை நிலவரம். தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களிலும், வெப்ப சலன காற்று சுழற்சி மழை, தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில், தொடர்கிறது மழை.வரட்டுப்பள்ளுவம் அணை நிரம்பி, பவானியில் ஆற்றிலே நீர் கலக்கிறது. அதே போல, வனப்பகுதிகளில் பொழிந்த மழை, எண்ணமங்கலம் ஏரி வழியாகவும், எண்ணமங்கலம் ஏரிக்கு முன்பாகவும், மழைப்பொழிவு, உபரி நீராக, பூனாச்சி, காவிரியில் பூனாச்சி வழியாக, காவிரியில் கலந்து கொண்டிருக்கிறது. டெல்டா மாவட்டங்களின், தெற்கு பகுதியிலும், புதுக்கோட்டை மாவட்ட பகுதியிலும், தற்பொழுது மழை தொடங்கி இருக்கிறது.இந்த நிகழ்வு, மேற்கு நோக்கி நகரும் பொழுது, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், 17 தேதி வரை இந்த நிகழ்வால் மழை. அடுத்தது, 18 தேதியிலிருந்து, அந்தமனுக்கும் தமிழகத்திற்கு இடைப்பட்ட பகுதியில, காற்று சுழற்சி ஏற்படுத்தி, கிழக்கு காற்றை கொண்டு வந்து, எந்த நேரம் வேணாலும், மழைப்பொழிவு கொடுக்கும் வகையில, 20 வரை மழை.இருபதாம் தேதி தீவிரமடைந்து, வடகிழக்கு பருவமழை, 21, 22 தேதிகள்  தொடங்கும். அதுவே, தீவிரமடைந்து, ஆந்திர கரையை, புயலாக சென்று கடக்கும். ஆகவே, மழைப்பொழிவும் இருக்கிறது, இடைவெளியும் இருக்கிறது, இடையூறும் இருக்கிறது. வானிலையின், விரிவான அறிக்கை பார்த்து, தீபாவளிக்கு இடையூறு உண்டா? இடைவெளி உண்டா? அறுவடைக்கு, எப்பொழுது இடைவெளி? இணைந்திருக்க?



Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform





 


 

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog