வட இலங்கை தரையேறியது தாழ்வு,கடல் இறங்கி மீண்டும் தீவிரமாகும்,டிச 27 முடிய கனமழை.

0

வட இலங்கை தரையேறியது தாழ்வு.
கடல் இறங்கி மீண்டும் தீவிரமாகும்.
டிச 27 முடிய கனமழை.


வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் இருபத்தி ஐந்து, கிறிஸ்துமஸ் தினம் மாலை நான்கு மணிவரை, ஒரு நிமிட ஆய்வறிக்கை. அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை அறிக்கையை பார்க்கவும்
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த, காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலைக்கு பிறகு, திரிகோணமலை அருகே, இலங்கை வட இலங்கை தரையேறியது. தற்பொழுது ஏறியதும், செயலிழந்து, நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக, தென்மேற்கு திசையை நோக்கி, இலங்கையின், மேற்கு பகுதியை நோக்கி, இறங்க, நகர்ந்து கொண்டிருக்கிறது. இது, மன்னார் வளைகுடாவிலே, மன்னார் வளைகுடாவின், தெற்கு பகுதியிலே இறங்கி, குமரி கடல் பகுதியாக, அரபிக்கடலை நோக்கி நகரும் மன்னார் வளைகுடாவின் தெற்குப் பகுதியிலே இறங்கியதும், மீண்டும் தீவிரமடையும். டெல்டா மாவட்டங்களில், இன்று பெய்த மழைப் பொழிவைக் காட்டிலும், நாளை மழைப்பொழிவு கூடுதலாக இருக்கும். தென் மாவட்டங்களில் மழைப்பொழிவு தொடங்கி, தீவிரமாக இருக்கும். நாளைய மறுதினம், இருபத்தி ஏழாம் தேதிவரை, மழைப்பொழிவு இருக்கிறது.  நாளைய மறுதினம் வரைக்கும், அனைத்து மாவட்டங்களுக்கும், வழி இருக்கிறது. நாளை, கொஞ்சம், தீவிர மழையாக இருக்கும்.
 இருபத்தி எட்டாம் தேதி, கிழக்கு காற்று, வருகை காரணமாக, விட்டு விட்டு, மழை இருக்கும். இருபத்தி ஏழாம் தேதி வரை, பரவலான மழை. விரிவான அறிக்கையை பார்த்து, பயன்பெறுங்கள்
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details on Agriculture helping platform


Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog