நெருங்கிய நிகழ்வு. கனமழை தாமதம். தவிர விலகாது. மழை தீவிரம் எங்கே?

0

நெருங்கிய நிகழ்வு.கனமழை தாமதம்.தவிர விலகாது.
மழை தீவிரம் எங்கே ?

வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் இருபத்தி ஐந்து. இனிய கிறிஸ்துமஸ் திருநாளின், ஒரு நிமிட வானிலை ஆய்வறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கவும்.
 நிலநடுக்கோட்டை இந்திய பெருங்கடலில் உருவாகி, அங்கமிங்கும் திரிந்து அலைந்து, இறுதியிலே எதிர்பார்க்கப்பட்ட இடத்தை, சரியாக திரிகோணமலை, முல்லைத்தீவு பகுதியே நெருங்கிவிட்டது. நிகழ்வு இலங்கையோட வடக்கு பகுதியில தரையேறி, மன்னார் வளைகுடாவின் தெற்குப் பகுதியில கடல் இறங்கி, குமரி கடல் வழியாக, அரபிக்கடலுக்கு செல்ல இருக்கிறது. இது இன்று இருபத்தி ஐந்தாம் தேதி, இலங்கை தரை மீதும், இருபத்தி ஆறாம் தேதி மன்னார் வளைகுடா தெற்கு பகுதி, குமரி கடல் பகுதியும், இருபத்தி ஏழாம் தேதி குமரி கடல் மற்றும் அரபிக்கடல் தெற்கு பகுதிகளிலும் நகர்ந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பொழிவை கொடுக்கும். அனைத்து மாவட்டங்களுக்கும் மழை கொடுக்கிற நிலையில, டெல்டா மாவட்டங்களின் தெற்கு பகுதி மற்றும் தென் மாவட்டங்கள்ல நல்ல மழை பொழிப்பதற்கும், டெல்டா மாவட்டங்களை விட நாளை எல்லாம், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலேயும், நல்ல மழை பொழிவைக் கெடுக்கும். அனைத்து மாவட்டங்களுக்கும், மழை இருக்கிறது. இருபத்தி ஏழாம் தேதி, இரவு வரைக்கும், மழைப்பொழிவு இருக்கிறது. விட்டு விட்டு, மழை, இருபத்தி ஏழு இருக்கும். இருபத்தாறு வரை, பரவலாக இருக்கும். நன்றி

Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details on Agriculture helping platform

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog