டிச 18 இரவு முதல் மீண்டும் கனமழைபொங்கல் முடிய தீவிர நிகழ்வுகள்
வணக்கம். செல்வகுமாரின், அதிகாலை ஒரு நிமிட ஆய்வறிக்கை. அதிகாரபூர்வ வானிலை அறிக்கைக்கு , இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்வும், இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் பதினாறு, வெள்ளிக்கிழமை அதிகாலை பதிவு. அரபிக்கடல் நிகழ்வு, விலகி சென்று கொண்டிருக்கிறது. அதை நாம் கருத்தில் கொள்ள தேவையில்லை. இதனால, மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில மட்டும், வலுவான காற்று பயணிக்கிறது,
அரபிக்கடல் நோக்கி புதிய நிகழ்வு, அந்தமானின் தெற்குப் பகுதி மற்றும் சுமத்ரா தீவு பகுதியில, உருவாகியிருக்கிறது. இது, நிலநடுக்கோட்டுப் பகுதியில, உருவாகியிருக்கக் கூடிய, ஒரு நிகழ்வு, கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. வடக்கே, வடமேற்கு நோக்கி, நகராமல் இருந்த போதிலும், அதோட, அதோட, பிடியிலிருந்து விலகி,
மெல்ல, நன்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக, இலங்கை நெருங்கி வந்து, பிறகு தீவிரமடைந்து கூட, அல்லது இதே நிலையில் தொடர்ந்து கூட, வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை, பதினெட்டாம் தேதி, இரவிலிருந்து, நள்ளிரவிலிருந்து மழைப்பொழிவைத் தொடுக்கும். பத்தொன்பதாம் தேதி, திங்கட்கிழமையில் இருந்து,
தமிழகத்தில் பெரும்பாலான பகுதியில மழை தொடங்கி, இருபத்தி ஏழாம் தேதிவரை மழைக்கு வானிலை. அடுத்தடுத்த நிகழ்வுகளும் பொங்கல் வர இருக்கிறது. விரிவான அறிக்கையை பார்த்து பயன்பெற அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி
2022 டிசம்பர் 16 வெள்ளிக்கிழமை அதிகாலை ஆய்வறிக்கை
லட்சத்தீவு பகுதியை விட்டு விலகி ஆப்பிரிக்க சோமாலியா மற்றும் ஏடன் வளைகுடா பகுதியை நோக்கி விலகி செல்லும் மான்டோசின் தீவிரமடைந்த பகுதி கருத்தில் கொள்ள தேவையில்லை.கடலிலேயே ஏடன் வளைகுடா மற்றும் சோமாலியா கடலோரம் நெருங்கி முற்றிலுமாக செயல் இழக்கும்.
இந்த நிகழ்வு வங்கக்கடல் காற்றை மன்னார் வளைகுடா, குமரிக்கடல் வழியாக ஈர்க்கிறது.இதன் காரணமாக மன்னார் வளைகுடாவின் தெற்கு பகுதி குமரி கடல் பகுதி மாலத்தீவு பகுதி கேரளா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதியில் வலுவான காற்று பயணிக்கும்.
கிழக்கு வடகிழக்கு குளிர்ந்த காற்று தமிழகம் தரை ஏற , நீராவியை மேகமாக மாற்ற சாதக வெப்பக்காற்று காற்று இல்லாத காரணத்தால் காற்று குளிர்ந்து மேகமாக, மழையாக மாறாமல் பனியாக பொழியும். அதிகாலை காலை நேரங்களில் மூடுபனி வரும் டிசம்பர் 18 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை காணப்படும் வெயில் வந்ததும் வெப்ப சாதகம் ஏற்படும் ஓரிரு இடங்களில் மேகம் உருவாகி எங்காவது ஓரிரு இடங்களில் தூறலாம்.
டிசம்பர் 18 ஞாயிற்றுக்கிழமை மாலை வரை மழை உறுதி அல்ல.
டிசம்பர் 16,17 18 இடைவெளி கிடைக்கும்.
தெற்குஅந்தமான் கடற்பகுதி, சுமத்ரா தீவு மற்றும் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் நிலை கொண்டுள்ள நன்கு அமைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி டிசம்பர் 18 இலங்கையை தொட்டு டிசம்பர் 18 ஞாயிறு இரவு அல்லது டிசம்பர் 19 திங்கள் அதிகாலை ராமேஸ்வரம் ,ராமநாதபுரம் மாவட்ட கடலோரம், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் பகுதி முதல் மழையை தொடக்கும்.
டிசம்பர் 19 திங்கட்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் மழை தொடங்கி விடும்.
டிசம்பர் 19 முதல் 27 வரை நிறைய மழைப்பொழிவு கொடுக்க அடுத்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை நடக்கவுள்ள பள்ளிகளின்(அரையாண்டுத்தேர்வு) இரண்டாம் பருவத் தேர்விற்கு இடையூறு கொடுக்கும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் ஒட்டுமொத்த அனைத்து தமிழக மாவட்டங்கள்,ஆந்திர பிரதேசம் ,கர்நாடகா, கேரளா, புதுச்சேரி காரைக்கால் மாஹி, ஏனாம் ஆகிய பகுதிக்கும் நல்ல மழை பொழிவு கொடுக்கும்.டிசம்பர் 19க்குள் அடுத்த மழை தொடங்கி கிறிஸ்துமஸ் நாளிலும் மழையை கொடுத்து டிசம்பர் 27 முடிய இந்த சுற்றில் மழைப்பொழிவு உறுதியாக தெரிகிறது.
கிறிஸ்மஸ் பண்டிகைக்கு மழை இடைவெளி எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்பொழுது வருவது தாமதம் அடைவதால் கிறிஸ்மஸ் பண்டிகைக்கும் மழை பொழிவை கொடுக்கும் என்று தெரிகிறது.
மேலும் டிசம்பர் இறுதி ஜனவரி முற்பகுதி இல் ஒரு நிகழ்வும்,பொங்கலுக்கு முன் ஒரு நிகழ்வும் பொங்கலுக்கு பின் ஒரு நிகழ்வும் என ஜனவரி 20 வரை நிகழ்வுகளால் வடகிழக்கு பருவமழை தொடரும்.நல்ல மழைப்பொழிவு இருக்கிறது, வறட்சியான பகுதியில் என்று எதுவுமே இருக்காது .
கண்டிப்பாக பொங்கலுக்குள் நிறைய மழை பொழியும். பல மாவட்டங்களில் சராசரிக்கு மிகவும் கூடுதல் மழையும், மேலும் பல மாவட்டங்களில் சராசரிக்கு கூடுதல மழையும், சில மாவட்டங்களில் சராசரி மழை என்ற நிலையை அடையும். குழப்பிக் கொள்ளாமல் நம்பிக்கையுடன் இருந்து திட்டமிட்ட வேளாண்மை செய்யுங்கள்.
ந.செல்வகுமார்
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Facebook: https://fb.me/vayalumvaanamum2Twitter : https://twitter.com/vayalumTelegram: https://t.me/vayalumvanamumWebsite: https://vayalumvaanamun.in
வணக்கம். செல்வகுமாரின், அதிகாலை ஒரு நிமிட ஆய்வறிக்கை. அதிகாரபூர்வ வானிலை அறிக்கைக்கு , இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்வும், இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் பதினாறு, வெள்ளிக்கிழமை அதிகாலை பதிவு. அரபிக்கடல் நிகழ்வு, விலகி சென்று கொண்டிருக்கிறது. அதை நாம் கருத்தில் கொள்ள தேவையில்லை. இதனால, மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில மட்டும், வலுவான காற்று பயணிக்கிறது,
அரபிக்கடல் நோக்கி புதிய நிகழ்வு, அந்தமானின் தெற்குப் பகுதி மற்றும் சுமத்ரா தீவு பகுதியில, உருவாகியிருக்கிறது. இது, நிலநடுக்கோட்டுப் பகுதியில, உருவாகியிருக்கக் கூடிய, ஒரு நிகழ்வு, கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. வடக்கே, வடமேற்கு நோக்கி, நகராமல் இருந்த போதிலும், அதோட, அதோட, பிடியிலிருந்து விலகி,
மெல்ல, நன்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக, இலங்கை நெருங்கி வந்து, பிறகு தீவிரமடைந்து கூட, அல்லது இதே நிலையில் தொடர்ந்து கூட, வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை, பதினெட்டாம் தேதி, இரவிலிருந்து, நள்ளிரவிலிருந்து மழைப்பொழிவைத் தொடுக்கும். பத்தொன்பதாம் தேதி, திங்கட்கிழமையில் இருந்து,
தமிழகத்தில் பெரும்பாலான பகுதியில மழை தொடங்கி, இருபத்தி ஏழாம் தேதிவரை மழைக்கு வானிலை. அடுத்தடுத்த நிகழ்வுகளும் பொங்கல் வர இருக்கிறது. விரிவான அறிக்கையை பார்த்து பயன்பெற அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி
2022 டிசம்பர் 16 வெள்ளிக்கிழமை அதிகாலை ஆய்வறிக்கை
லட்சத்தீவு பகுதியை விட்டு விலகி ஆப்பிரிக்க சோமாலியா மற்றும் ஏடன் வளைகுடா பகுதியை நோக்கி விலகி செல்லும் மான்டோசின் தீவிரமடைந்த பகுதி கருத்தில் கொள்ள தேவையில்லை.
கடலிலேயே ஏடன் வளைகுடா மற்றும் சோமாலியா கடலோரம் நெருங்கி முற்றிலுமாக செயல் இழக்கும்.
இந்த நிகழ்வு வங்கக்கடல் காற்றை மன்னார் வளைகுடா, குமரிக்கடல் வழியாக ஈர்க்கிறது.இதன் காரணமாக மன்னார் வளைகுடாவின் தெற்கு பகுதி குமரி கடல் பகுதி மாலத்தீவு பகுதி கேரளா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதியில் வலுவான காற்று பயணிக்கும்.
கிழக்கு வடகிழக்கு குளிர்ந்த காற்று தமிழகம் தரை ஏற , நீராவியை மேகமாக மாற்ற சாதக வெப்பக்காற்று காற்று இல்லாத காரணத்தால் காற்று குளிர்ந்து மேகமாக, மழையாக மாறாமல் பனியாக பொழியும். அதிகாலை காலை நேரங்களில் மூடுபனி வரும் டிசம்பர் 18 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை காணப்படும் வெயில் வந்ததும் வெப்ப சாதகம் ஏற்படும் ஓரிரு இடங்களில் மேகம் உருவாகி எங்காவது ஓரிரு இடங்களில் தூறலாம்.
டிசம்பர் 18 ஞாயிற்றுக்கிழமை மாலை வரை மழை உறுதி அல்ல.
டிசம்பர் 16,17 18 இடைவெளி கிடைக்கும்.
தெற்குஅந்தமான் கடற்பகுதி, சுமத்ரா தீவு மற்றும் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் நிலை கொண்டுள்ள நன்கு அமைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி டிசம்பர் 18 இலங்கையை தொட்டு டிசம்பர் 18 ஞாயிறு இரவு அல்லது டிசம்பர் 19 திங்கள் அதிகாலை ராமேஸ்வரம் ,ராமநாதபுரம் மாவட்ட கடலோரம், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் பகுதி முதல் மழையை தொடக்கும்.
டிசம்பர் 19 திங்கட்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் மழை தொடங்கி விடும்.
டிசம்பர் 19 முதல் 27 வரை நிறைய மழைப்பொழிவு கொடுக்க அடுத்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை நடக்கவுள்ள பள்ளிகளின்(அரையாண்டுத்தேர்வு) இரண்டாம் பருவத் தேர்விற்கு இடையூறு கொடுக்கும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் ஒட்டுமொத்த அனைத்து தமிழக மாவட்டங்கள்,ஆந்திர பிரதேசம் ,கர்நாடகா, கேரளா, புதுச்சேரி காரைக்கால் மாஹி, ஏனாம் ஆகிய பகுதிக்கும் நல்ல மழை பொழிவு கொடுக்கும்.
டிசம்பர் 19க்குள் அடுத்த மழை தொடங்கி கிறிஸ்துமஸ் நாளிலும் மழையை கொடுத்து டிசம்பர் 27 முடிய இந்த சுற்றில் மழைப்பொழிவு உறுதியாக தெரிகிறது.
கிறிஸ்மஸ் பண்டிகைக்கு மழை இடைவெளி எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்பொழுது வருவது தாமதம் அடைவதால் கிறிஸ்மஸ் பண்டிகைக்கும் மழை பொழிவை கொடுக்கும் என்று தெரிகிறது.
மேலும் டிசம்பர் இறுதி ஜனவரி முற்பகுதி இல் ஒரு நிகழ்வும்,
பொங்கலுக்கு முன் ஒரு நிகழ்வும் பொங்கலுக்கு பின் ஒரு நிகழ்வும் என ஜனவரி 20 வரை நிகழ்வுகளால் வடகிழக்கு பருவமழை தொடரும்.
நல்ல மழைப்பொழிவு இருக்கிறது, வறட்சியான பகுதியில் என்று எதுவுமே இருக்காது .
கண்டிப்பாக பொங்கலுக்குள் நிறைய மழை பொழியும். பல மாவட்டங்களில் சராசரிக்கு மிகவும் கூடுதல் மழையும், மேலும் பல மாவட்டங்களில் சராசரிக்கு கூடுதல மழையும், சில மாவட்டங்களில் சராசரி மழை என்ற நிலையை அடையும். குழப்பிக் கொள்ளாமல் நம்பிக்கையுடன் இருந்து திட்டமிட்ட வேளாண்மை செய்யுங்கள்.
ந.செல்வகுமார்
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Facebook: https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamun.in