வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் பதினைந்து. வியாழக்கிழமை இரவு ஏழு மணி நிலவர ஒரு நிமிட ஆய்வறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை அறிக்கையை பார்க்கவும்.
அரபிக்கடலில் நிலை கொண்டிருக்கக்கூடிய, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு நோக்கி விலகும். இதனால, மழைக்கு வாய்ப்பு இல்லை
புதிய நிகழ்வு, மெல்ல, இலங்கை பகுதியே நோக்கி நகர்ந்து வரும். தற்பொழுது, சுமத்ராத்தி அருகே, நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, தீவிரமடைந்திருக்கிறது. இது, வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை, பதினெட்டாம் தேதி, இலங்கையைத் தொட்டு, மழைப்பொழிவைக் கொடுக்கும்.
ஞாயிற்றுக்கிழமை இரவு, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களின், கோடியக்கரை முனைக்கு, மழைப்பொழிவை தொடங்கும். திங்கட்கிழமை, அதிகாலை, டெல்டா மாவட்டங்கள்ல, மழை தொடங்குவதற்கு வாய்ப்பு, தாமதம் அடைந்தால், திங்கட்கிழமை காலைக்குள், மழை தொடங்கும். அதிலிருந்து, Christmas வரைக்கும், மழைப்பொழிவு, அதுக்கு அடுத்த நாள்கூட, மழை தொடர வாய்ப்பிருக்கிறது.
அடுத்தடுத்து, இரு நிகழ்வு காரணமாக, நல்ல மழைப்பொழிவு, அடுத்த வாரம். இருபத்தி ஏழாம் தேதி வரைக்கும், மழைக்கு வாய்ப்பு, பிரகாசமாக இருக்கிறது. தொடர்ந்து இணைந்திருங்கள், விரிவான அறிக்கையுடன்