தாழ்வு அமைவு மெல்ல வந்து காத்திருந்து கனமழை தரும்

0

தாழ்வு அமைவு மெல்ல வந்து காத்திருந்து
கனமழை தரும்

வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி ரெண்டு, டிசம்பர் பதினேழு, சனிக்கிழமை, அதிகாலை நான்கு மணிவரை, ஒரு நிமிட ஆய்வு அறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை, பார்க்கப்போகிறோம்.

 அந்தமண்ணுக்கு, தெற்கே இன்று நிழல் கோட்டை, இந்திய பெருங்கடல் அருகே, உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மெல்ல நகர்ந்து வருகிறது. ஆனால், தீவிரமடைவதிலே, சற்று பின்னடைவு. காரணம், நிலநடுக்கோட்டுக்கு, தெற்கு அறைப்பகுதியிலே, நீடித்துக் கொண்டிருக்கக்கூடிய அதாவது, தென்னறை கோளை, காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு, வட துருவ குளிர் அலையை, அந்தமான் கடற்பகுதியில், நீடித்துக் கொண்டிருக்கக்கூடிய, தாழ்வு பகுதியில், சுடல செய்து, பிறகு, தெற்கு நோக்கி, ஈர்க்கும் வண்ணம், settings, set ஆகியிருக்கிறது. இருந்த போதிலும், தென்னறை கோல நிகழ்வானது, அதாவது, மகர நீக்கை நோக்கி, விலகிச் செல்லும் என்பதனால, பிறகு, இதனுடைய, அதிலிருந்து விடுபட்டு, நிலநடுக்கோட்டை, இந்திய பெருங்கடல் காற்றை ஈர்த்து, தமிழகம் நெருங்கி வந்து, மழை பொழிவு வரக்கூடிய, பத்தொன்பதாம் தேதியிலிருந்து, மழைப்பொழிவு தொடக்கம். இருபதாம் தேதியிலிருந்து, இருபத்தி மூன்றாம் தேதி வரை, நல்ல மழை கொடுக்கும். ஆனால், இடையிடையே விலகியும் செல்லும், அங்குமிங்கும் நகரும், மழைப்பொழிவும், குளிர் பொழிவும், பனிப்பொழிவோம், கனமழை பொழிவோம், லேசான மழை பொழிவும் என்று, வரக்கூடிய ஜனவரி மூன்றாம் தேதிவரை, அடுத்தடுத்த நிகழ்வு, இதோட வந்து, இணைந்து மழைப்பொழிவை மாற்றி, மாற்றி அமைக்கும். தினசரி வானிலை அறிக்கை கேட்டு, பயன்பெறுக. நன்றி


2022 டிசம்பர் 17 சனிக்கிழமை அதிகாலை ஆய்வறிக்கை: 

டிசம்பர் 18 ஞாயிற்றுக்கிழமை காலை வரை மழை வாய்ப்பு இல்லை.

தெற்குஅந்தமான் கடற்பகுதி, சுமத்ரா தீவு  மற்றும் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான  காற்றழுத்தத்தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து வந்திருக்கிறது. டிசம்பர் 18 ஞாயிறு இலங்கைக்கு மழையை தொடுக்கும். டிசம்பர் 18 ஞாயிறு நள்ளிரவு அல்லது டிசம்பர் 19 திங்கள் அதிகாலை, காலை ராமேஸ்வரம் ,ராமநாதபுரம் மாவட்ட கடலோரம், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் பகுதி முதல் மழையை தொடக்கும்.

டிசம்பர் 19 திங்கட்கிழமை இரவு அனைத்து மாவட்டங்களிலும் மழை தொடங்கி விடும்.

டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரை நிறைய மழைப்பொழிவு கொடுக்க அடுத்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை நடக்கவுள்ள பள்ளிகளின்(அரையாண்டுத்தேர்வு) இரண்டாம் பருவத் தேர்விற்கு இடையூறு கொடுக்கும் என்று தெரிகிறது.

மிக முக்கிய குறிப்பு

நிலநடுக்கோட்டை ஒட்டி தெற்கே உருவாகியுள்ள தென் அறைக்கோள ஆழ்ந்த தாழ்வு மண்டலம், வட அரைக்கோள குளிர் காற்றை ரஷ்யா, மங்கோலியா ,சீனா ,வியட்நாம் கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, மியான்மர் ,மலேசியா, அந்தமான் தெற்கு வங்க கடல் வழியாக ஈர்க்கிற காரணத்தால் வட துருவ காற்று வங்கக்கடல் வழியாகநிலநடுக்கோட்டை தாண்டியும் பயணிக்கிறது.


அந்தமான் சுமத்ரா இலங்கை இடைப்பட்ட பகுதியில் நிலை கொண்டிருக்கும் தாழ்வு பகுதி வடதுருவ காற்றை தனக்குள் ஈர்த்து அனுப்பி வைக்கிறது.

நிலநடுக்கோட்டை ஒட்டி தெற்கு பகுதியில் நீடிக்கும் தாழ்வு மண்டலம் தெற்காக மகர ரேகை நோக்கி விலகி செல்லும் என்பதால் நிலநடுக்கோட்டு காற்று இலங்கை நெருங்கும் தாழ்வு பகுதிக்கு வரும்.

ஜனவரி 2 க்குள் மேலும் இரண்டு நிகழ்வுகள் தற்போதைய வங்கக்கடல் நிகழ்வுடன் இணைய வரும் என்பதால், இணைய வரும் முன் தென் சீனா கடற்பகுதி மற்றும் தாய்லாந்து வளைகுடா பகுதியுடன் வட துருவ குளிரலை வருவது தடைபடும் என்பதால் தமிழகத்திற்கு நல்ல மழை பொழிவு இருக்கிறது.

டிசம்பர் 19 தமிழகத்தில் தொடங்கும் மழையை கொண்டு வரும் தாழ்வு பகுதி ஜனவரி 2 வரை தொடர்ந்து தமிழகம் இலங்கை அருகே நீடித்துக் கொண்டிருக்கும்.

அரபிக் கடலுக்கும் உடனடியாக போகாது. அடுத்தடுத்து வரும் நிகழ்வுகளுடன் இணைந்து மழை பொழிவை கொடுக்கும்.


ஆனால் மழை பொழிவை கொடுத்துக் கொண்டிருக்கும்போது அடுத்த நிகழ்வு வந்தால் இணைந்து தொடர்ச்சியாக மழை பொழிவை கொடுக்கலாம் அல்லது இணைவதற்கு விலகி சென்று இணைந்து வரலாம்.இணைவதற்கு விலகி சென்று இணைந்து வரும் இடைப்பட்ட காலத்தில் மழை இடைவெளி கொடுத்து  குளிரையும் கொடுக்கும். இணைந்து வந்தால் மீண்டும் கனமழையை கொடுக்கும்.

எந்த மாவட்டத்திற்கு எப்பொழுது எவ்வளவு மழை என்பதை இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு மட்டுமே அறிவிக்க முடியும்.

அதே நேரத்தில் ஒட்டுமொத்த அனைத்து தமிழக மாவட்டங்கள்,ஆந்திர பிரதேசம் ,கர்நாடகா, கேரளா, புதுச்சேரி காரைக்கால் மாஹி, ஏனாம் ஆகிய பகுதிக்கும் பொங்கலுக்குள் நிறைய மழை பொழிவு கொடுக்கும்.

 வறட்சியான பகுதியில் என்று எதுவுமே இருக்காது .

 கண்டிப்பாக பொங்கலுக்குள் நிறைய மழை பொழியும். பல மாவட்டங்களில் சராசரிக்கு மிகவும் கூடுதல் மழையும், மேலும் பல மாவட்டங்களில் சராசரிக்கு கூடுதல மழையும், சில மாவட்டங்களில் சராசரி மழை என்ற நிலையை அடையும். குழப்பிக் கொள்ளாமல் நம்பிக்கையுடன் இருந்து திட்டமிட்ட வேளாண்மை செய்யுங்கள்.


ந.செல்வகுமார்.

Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform


Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog