மெல்ல வந்தது மெல்ல விலகும் மாண்டஸ் புயல்.நாள் கணக்கில் காற்று & மழை
இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு December ஏழு, இரவு ஒரு நிமிட வானிலை ஆய்வறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை அறிக்கையை பார்க்கவும். வங்கக்கடலில் நிகழ்ந்த, ஆந்திர காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்பொழுது புயலாக உருவெடுத்தது. Mondersஆக உருவெடுத்து, தற்பொழுது, சென்னைக்கு, கிழக்கு, தென்கிழக்கே, அறுநூறு கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு, ஐநூற்று முப்பது கிலோமீட்டர் தொலைவிலும், யாழ்ப்பாணத்திற்கு, நானூற்று அறுபது கிலோமீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு முன்னூத்தி பதினைந்து கிலோமீட்டர், கிழக்கே நீடித்துக் கொண்டிருக்கிறது. மிக மெல்ல நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, இது மழைப்பொழிவை தொடங்குவதுல, சற்று தாமதம் ஏற்பட்டாலும், நாளை அதிகாலை காலைக்குள், கடலோர மாவட்டங்கள்ல தூறல் மழையும், லேசான ஒரு சாரல் காற்றுடன் மழைப்பொழிவு தொடங்கும். தமிழகத்தில் உள் மாவட்டங்கள்ல, ஆங்காங்கே அதிகாலையில பனிப்பொழிவு காணப்பட்டாலும், பனியை தள்ளிவிட்டு, உள்ளே வந்து, நாளை மழைப்பொழிவை தொடங்கும் கண்டிப்பாக, நாளை மாலையில் இருந்து, நல்ல மழைப்பொழிவு, காற்றுடன் இருக்கும். இருபத்தி நான்கு மணி நேர, குறைந்தபட்ச காற்றுடன் மழையும், அதிகபட்சமாக, நாற்பத்தி எட்டு மணி நேர காற்றுடன் மழை, வட கடலோர மாவட்டங்களுக்கு இருக்கும். விரிவான அறிக்கையை பார்த்து, பயன்பெறுக
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
