வரும் நாள்கள் வானிலை எப்படி? உங்களுக்கு கனமழைஎப்போது?அறுவடைக்கு இடைவெளி எப்போது?
இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் ஒன்று இறவறிக்கை. காற்று சுழற்சி, தொடர்ந்து இலங்கைக்கு அருகே நீடித்துக் கொண்டிருக்கிறது. வட கடலோர மாவட்டங்களுக்கு தொடர்ந்து மழைப்பொழிவை கொடுத்து வருகிறது.ஓய்ந்திருந்த புதுச்சேரி மழை, மீண்டும் தொடங்கி இருக்கிறது. தற்பொழுது, உள் மாவட்டங்களுக்கு, மழைப்பொழிவு, முன்னேறி வருகிறது. உடுமலைப்பேட்டையில் உள்ள, உடுமலைப்பேட்டை பகுதிகளுக்கும், மழை தொடங்கி இருக்கிறது. தென் மாவட்ட பகுதிகளுக்கும், மழை தொடங்கி இருக்கிறது. இன்னும், தொடங்காத மாவட்டங்கள் எல்லாம், நள்ளிரவு, அதிகாலைக்குள், மழை தொடங்கும். நாளை, பகலிலே தொடங்காத இடமெல்லாம், தொடங்கி விடும்.கடலோர மாவட்டங்கள் மழை. அதாவது, வட கடலோர மாவட்ட மழை, சற்று தீவிரம் குறையத் தொடங்கும். நாளைக்கு மேல், படிப்படியாக. ஆனால், டெல்டா மாவட்டத்தில், தெற்கே, டெல்டா மாவட்டங்கள், மற்றும் டெல்டாவிற்கு, தெற்கு உள்ள மாவட்டங்களுக்கு, மழைப்பொழிவு தொடரும். தீவிரமடையும்.இந்த நிகழ்வு, அரபிக் கடலுக்கு சென்ற பின், அடுத்த நிகழ்வு, நான்காம் தேதியிலிருந்து வந்து, ஏழாம் தேதி வரை, மழைப்பொழிவை கொடுக்கும். ஐந்து, ஆறு தேதிகள்ல, தென் மாவட்டங்கள்லாம், கனமழை காத்திருக்கிறது. டெல்டா மாவட்டங்கள்லாம், ஐந்து, ஆறு தேதிகள்ல, கனமழை காத்திருக்கிறது.விரிவான அறிக்கை பார்த்து பயன்பெறுக.
