நவ 4,5,6 கன -மிக கனமழை.நவ 7,8,9 இடைவெளிக்குஇடையே அவ்வப்போது மழை.நவ10,11,12,13 தீவிர மழை.
வணக்கம். செல்வகுமாரின், 2022, நவம்பர் 3 வியாழக்கிழமை, மாலை 6 மணி நிலவர, ஒரு நிமிட ஆய்வறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கவும். கடந்த 24 மணி நேரம், மழைப்பொழிவு பார்த்தீங்கன்னா, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 22 செமீ மழை பொழிந்திருக்கிறது.தஞ்சாவூர் தலைநகர் பகுதியில, 18 செமீ. இன்னும் பல இடங்கள்ல, கனமழை பொழிந்திருக்கிறது. இன்றைக்கும், பல இடங்கள்ல, கனமழை, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில், கனமழை பொழிந்தது. தென் மாவட்டங்கள், மழை பொழிந்து கொண்டிருக்கிறது. காற்று சுழற்சியானது, மேற்கு நோக்கி நகர்கிறது. அடுத்த நிகழ்வு, தமிழகம் நெருங்கி விட்டது. மீண்டும், மழைப்பொழிவு, அடுத்த நிகழ்வு காரணமாக, படிப்படியாக அதிகரிக்கும்.தற்பொழுது, விழுப்புரம் மாவட்டத்திலே, தொடங்கி இருக்கக்கூடிய மழை, கன்னியாகுமரி வரைக்கும், ஆங்காங்கே பொழிந்து கொண்டிருக்கிறது. இன்று இரவு, விழுப்புரம் முதல், கன்னியாகுமரி வரைக்கும், உள் மாவட்டங்கள்யும், தென் மாவட்டங்கள்யும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்லயும், மழைப்பொழிவு கொடுக்கும். நாளை, அதிகாலை, டெல்டா மாவட்டங்கள், நல்ல மழை காத்திருக்கிறது.நாளை 4ம் தேதி முதல், 6ம் தேதி வரை, இந்த சுற்றின் மழைப்பொழிவு, தென் மாவட்டங்களுக்கும், டெல்டா மாவட்டங்களுக்கும் இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கும். அடுத்த நிகழ்வு, 9ம் தேதியிலிருந்து, 13ம் தேதிவரை மழை பொழிப்பை கொடுக்கும். இடையில், இரண்டு நாள் இடைவெளி இருக்கிறது. விரிவான அறிக்கை பார்த்து, பயன்பெறுங்கள்

.jpeg)
.jpeg)

