தமிழகமெங்கும் கனமழை பரவலாகி அதிகரிக்கும்.வரும் நாள்கள் எப்படி?
நவ 3 கனமழை.
நவ 4,5,6 மிக கனமழை.
நவ 7,8 ஆங்காங்கே மழை.
நவ 9,10,11,12,13 தீவிர மழை.
2022 நவம்பர்3 வியாழக்கிழமை கிழமை அதிகாலை அறிக்கை.நேற்று தென் மாவட்டங்கள்,மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்,மேற்கு உள் மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்களில் கனமழை பொழிந்தது.வட கடலோரம் வட மாவட்டங்களில் ஆங்காங்கே காணப்பட்டது.நள்ளிரவுக்குப் பின் மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு காணபட்ட நிலையில், காற்று சுழற்சியானது தற்பொழுது இலங்கையின் வடக்குப்பகுதியில் டெல்டா மாவட்டங்களை ஒட்டி நீடித்து கொண்டிருக்கிறது. இது தமிழக தரை ஏறி பிறகு கேரளா வழியாக அரபிக் கடலை நோக்கி இருக்கிற நிலையில நாளை புதிய காற்றழுத்த தாழ்வு நிலை. இலங்கை வட வடமுனைக்கு வந்து தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இலங்கையின் வடமுனைக்கு இடைப்பட்ட பாக் ஜலசந்தி வழியாக 4ம் தேதி பாக் ஜலசந்தி 5ம் தேதி பாக் ஜலசந்தியின் உள் பகுதி 6ம் தேதி மன்னார் வளைகுடா 7ம் தேதிகுமரி கடல் அடைந்து அரபிக் கடலை நோக்கி நகரும் இருக்கிறது. இதன் காரணமாக மழைப்பொழிவு இன்று மதியத்தில் இருந்து படிப்படியாக அதிகரிக்கும். நாளை மழைப்பொழிவு பரவலாகம் சென்னை திருவள்ளூருக்கு மீண்டும் மழை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு. அரபிக் கடலில் நகர்ந்த பிறகு 7,8 சிறிய இடைவெளி கிடைக்கும். மீண்டும் அடுத்த நிகழ்வால் 9ல் இருந்து 13 ந்தேதி வரை கனமழை காத்திருக்கிறது.
விரிவான அறிக்கையை பார்க்க கிளிக் செய்யவும்
வானிலை அமைவு படங்கள்
விரிவான அறிக்கையை பார்க்க கிளிக் செய்யவும்

