பரவலாகும் பருவ மழை.நாளை முதல் வலுக்கும்.கன, மிககனமழை வாய்ப்பு.
இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, அக்டோபர், முப்பது, ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை பதிவு. இலங்கை, மற்றும், தென் தமிழக இடைப்பட்ட பகுதிகளில், நீடித்துக் கொண்டிருக்கக்கூடிய, கடலுடன் இணையாத, கீழடுக்கு சுழற்சி, மேற்கு நோக்கி, நகர்கிறது. இன்று, தென் தமிழகத்திலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், ஆங்காங்கே, மழை இருக்கும்.அதாவது, தெற்கு டெல்டா கரையோர பகுதிகள்லயும், ஆங்காங்கே மழை இருக்கும். வட உள் மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள்லயும், வட கடலோர பகுதிகள்லயும், ஒரு சில இடங்கள்ல மட்டும், மழை இருக்கும். நாளை முப்பத்தி ஓராம் தேதி, கடலுடன் இணைந்த காற்று சுழற்சி நெருங்குகிறது. முப்பத்தி ஓராம் தேதி, அதிகாலை முதல், டெல்டா மாவட்டங்கள், மற்றும் வட கடலோர மாவட்டங்கள்,கன மிக கனமழை வரை காத்திருக்கிறது. அடுத்தடுத்த நாட்களிலே, ஒன்றாம் தேதி, இரண்டாம் தேதியிலே தமிழகம் முழுவதும் அந்த நிகழ்வு பரவலாகி, மூன்றாம் தேதி அரபிக்கடலுக்கு, அந்த நிகழ்வு சென்ற பிறகு, மூன்றாம் தேதி புதிய நிகழ்வு, ஆறாம் தேதி வரை நீடிக்கும். ஆக, அடுத்தடுத்து இரண்டு நிகழ்வுகள் காரணமாக, ஆறாம் தேதி வரை, தமிழகத்திற்கு நாளை முதல், கனமழை காத்திருக்கிறது.ஏழாம் தேதி, அது குமரி கடல் பகுதியில நீடித்துக் கொண்டிருக்கும். ஏழு, எட்டு, ஒன்பது தேதிகள்ல. அதுல ஒரு அறுவடைக்கு இடைவெளி கிடைக்கும். ஆனால், நாள் முழுவதும் இடைவெளி கிடைக்காது. பக்குவமாக சில மணி நேர இடைவெளியை பயன்படுத்தி, அறுவடை செய்ய வேண்டும். அதற்கு அடுத்து இருக்கிறது, வலுவான நிகழ்வு, வட கடலோரத்திற்கு. விரிவான அறிக்கைஅறிக்கையை பார்த்து பயன் பெற அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
