இன்று கனமழை எங்கே?அடுத்தது வார காலம்அடை மழை கொடுக்க ஆயத்தம்
வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி ரெண்டு, டிசம்பர் பதினான்கு, புதன்கிழமை, அதிகாலை நான்கு மணி நிலவர, ஒரு நிமிடம் அறிக்கை.
அரபிக்கடல் சென்ற, மான்டோஸின் செயலிழந்த பகுதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக, நன்காழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகியது. இன்றைக்கு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி, விலகி செல்ல இருக்கிறது. லட்சத்தீவு அருகே, விலகி சென்று, சோமாலியா பகுதியை நோக்கி, விலகிச் செல்லும் இதன் காரணமாக, மழைப்பொழிவு படிப்படியாக குறையும். இருந்தபோதிலும், நேற்றைய மழைப்பொழிவு, தூத்துக்குடி மாவட்டத்தில், குறைவாக எதிர்பார்த்த நிலையில, தற்பொழுது, தூத்துக்குடி மாவட்டத்திற்கும், மழை பொழிகிறது. தேனி, மற்றும், மேற்கு தொடர்ச்சி, மலை மாவட்டங்கள், அனைத்திற்குமே, மழைப்பொழிவு, காணப்படுகிறது. இன்றைய பொருத்தவரைக்கும், புதுக்கோட்டைக்கு, தெற்கே உள்ள, அனைத்து மாவட்டங்களுக்கும், மற்றும் திண்டுக்கல்லுக்கு மேற்கே இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களுக்கும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்களுக்கு, இன்றைக்கு கனமழை காத்திருக்கிறது. பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகள்ல, நல்ல மழை காத்திருக்கிறது. நாளை, மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டும், மழைப்பொழிவு இருக்கும் பிற பகுதிகளில் மழைக்கு வாய்ப்பில்ல.
அடுத்த நிகழ்வு, வரும் வரை பனிப்பொழிவு விரைவில் இருக்கும். பனிப்பொழிவிற்கு காரணம், மழையாக உருவாக சாதக சூழல் காற்று இல்லாததுதான். ஆனால், மழை விலகாது. பருவமழை விலகாது. மழை தொடரும். அடுத்த நிகழ்வு, பத்தொன்பதிலிருந்து தீவிர மழையாக வரும். இணைந்திருங்கள் வானிலை அறிக்கையுடன்.
ஒரு நிமிட அறிக்கை பார்க்க கிளிக் செய்யவும்
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
