நாளையும் மழை.உங்களுக்கு உண்டா?அடுத்த நிகழ்வு வழித்தடம் எது?
வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் பன்னிரண்டு, திங்கட்கிழமை இரவு ஏழு மணி நிலவர ஒரு நிமிட ஆய்வறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கவும்.
வங்கக் கடலில் உருவாகி, மாமல்லபுரம் கரை கடந்து, மேற்கு நோக்கி நகர்ந்து, அரபிக்கடலில் இறங்கிய அந்த செயலிழந்த பகுதி தற்பொழுது மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதியாகியது. இது கிழக்கு காற்றை ஈர்த்து, இன்று சென்னை எல்லாம் மழைப்பொழிவை கொடுத்தது. அனைத்து மாவட்டங்களிலும் தற்பொழுது மழைப்பொழிவை ஆங்காங்கே, ஆங்காங்கே பெய்யும் இடத்தில வலுத்த கனத்த மழையை கொடுத்து வருகிறது. இந்த நிலையில, நாளையும் இந்த மழைப்பொழிவு தொடரும் வரக்கூடிய நாட்களை பொறுத்தவரைக்கும், நாளைய மறுதினம், பதினான்கு, பதினைந்து, பதினாறு, மூன்று நாட்கள். மழைப்பொழிவின் தீவிரம் குறைந்து, எங்காவது ஓரிரு இடங்கள்ல, மழை பட்டு போய் மட்டுமே, மழைப்பொழிவு இருக்கும். தெளிவான மானமாகிவிடும். அடுத்த நிகழ்வு, பதிமூன்றாம் தேதி வரக்கூடியது. பதினைந்து, பதினாறுல தீவிரமாகி, பதினேழாம் தேதி தமிழகம் தொட்டு, இருபத்தி இரண்டாம் தேதி வரைக்கும், அடுத்த நிகழ்வால், காற்றழுத்த தாழ்வு பகுதி அல்லது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தில், சிறப்பான மழைப்பொழிவை கொடுக்க இருக்கிறது. இணைந்திருங்கள், நன்றி
