மாண்டஸ் புயல் டிச 8,9,10 தரைக்காற்றுடன் அதீத மழை.
2022 டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை மாலை ஆய்வறிக்கை:
இரண்டாயிரத்தி இருபத்தி ரெண்டு, டிசம்பர் நான்கு, ஞாயிற்றுக்கிழமை, மாலை ஆறு மணி நிலவர ஒரு நிமிட ஆய்வறிக்கை. அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கவும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், அதாவது கடலூருக்கு தெற்கே, விழுப்புரத்திற்கு தெற்கே, கள்ளக்குறிச்சிக்கு தெற்கே, சேலத்துக்கு தெற்கே உள்ள, ஈரோடுக்கு தெற்கே, நீலகிரிக்கு தெற்கே உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பெய்து கொண்டிருக்கக்கூடிய மழை, படிப்படியாக இரவுக்குப் பின் விலகத் தொடங்கும். நாளை மாலைக்குள், முற்றிலுமாக விலகும் தென் மாவட்டத்துல. டெல்டா மாவட்டத்தில், நாளை அதிகாலை விலகும். பிற மாவட்டங்கள்ல, நாளை பகலுக்குள், தென் மாவட்டங்கள்ல விலகி, நாளை இரவுக்குள், அனைத்து மாவட்ட விலகி, அடுத்த சுற்றின் மழைப்பொழிவு, எட்டாம் தேதி, தீவிர நிகழ்வாக வரும். எட்டு, ஒன்பது, பத்து தேதிகளிலே, வரக்கூடிய, புயலானது, செயலிழந்து, கரை கடக்கும். ஆனால், கடலில் இருந்து கொண்டு, தரை காற்றை ஈர்த்து, கன, மிக கனமழை, அதி கனமழை, அதீத கனமழையை கொடுத்து, தரை காற்றுடன் கொடுக்கும். ஆனால், தரை காற்றை விட, பெரிய காற்று கிடையாது. சாதாரண தரைக்காற்று. கடலை நோக்கிச் செல்லும் காற்று. ஆனால், மழை அதிகமாக இருக்கும். இணைந்திருங்கள் வானிலையுடன் நன்றி.
