தீவிர தாழ்வு டிச25,26 இல் இலங்கை கரை கடந்து காற்றுடன் கனமழை எங்கே?

0

தீவிர தாழ்வு டிச25,26 இல் இலங்கை கரை கடந்து 
காற்றுடன் கனமழை எங்கே?


வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் இருபத்தி இரண்டு, வியாழக்கிழமை, அதிகாலை நான்கு மணி நிலவரம், ஒரு நிமிட ஆய்வறிக்கை. 


வங்கக்கடலில், இலங்கைக்கு கிழக்கு பகுதியில, இலங்கையிலிருந்து, ஐநூறு கிலோமீட்டர் தொலைவிலே, தீவிரமாகி நிலை கொண்டிருக்கக்கூடிய, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றைக்கும், நாளைக்கும், வடக்கு நோக்கி நகரும். தமிழக கரைக்கு, கிழக்கே, ஐநூத்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில, நிலை கொண்டு, பிறகு, அது தென்மேற்காக நகரத் தொடங்கும். வரக்கூடிய Christmas அன்றுக்கு முதல் நாள், December இருபத்தி நாலு சனிக்கிழமை, வட இலங்கையை நோக்கி நகரும். இருபத்தி ஐந்தாம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, வட இலங்கை கரை கடந்து, அதாவது, முல்லைத்தீவு, திரிகோணமலை இடைப்பட்ட பகுதி வழியாக, கரை கடந்து, மத்திய இலங்கை வழியாக, இலங்கையோட மேற்கு பகுதியை, மன்னார் வளைகுடாவில் அடைந்து, மன்னார் வளைகுடாவில் இறங்கி, குமரி கடல் வழியாக, அரபிக்கடலுக்கு பயணிக்கும். இருபத்தி நான்கு நெருங்கி, இருபத்தைந்து கரை கடந்து, இருபத்தாறு மண்டல விழாவை அடைந்து, இருபத்தி ஏழு, குமரி கடலில் நகர்ந்து, இருபத்தி எட்டில் லட்சத்தி பகுதி அடையும் இதனால, வரக்கூடிய இருபத்தி நாளில் இருந்து, இருபத்தி ஏழாம் தேதி வரைக்கும், தமிழகத்தில் மழைப்பொழிவு அதிகரிக்கும்.

 டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும், மிதமான காற்றுடன், மழைப்பொழிவிருக்கும். அச்சப்படாமல், வானிலையுடன் இணைந்திருந்து, திட்டமிட்ட வேளாண்மை செய்க

2022 டிசம்பர் 22 வியாழக்கிழமை அதிகாலை ஆய்வறிக்கை

நன்கமைந்த தாழ்வு பகுதி இலங்கைக்கு  கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது இலங்கையை சற்று நெருங்கி, இலங்கை கரைக்கு இணையாக 500 கிலோ மீட்டர் தொலைவிலும், தமிழக கரைக்கு இணையாக 550 கிலோ மீட்டர் தொலைவிலும் வடக்கு நோக்கி நகரும்.


டிசம்பர் 22 23 தேதிகளில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விட்டு விட்டு மழை இருக்கும்.


டிசம்பர் 22 23 தேதிகளில் சற்று வடக்கு நோக்கி நகரும் என்பதால் நேற்று போல் வேதாரண்யம் பகுதியில் மழை இருக்காது சற்று குறைவாக இருக்கும்.இரண்டு நாட்களுக்கு மழை விலகியது போல் இருக்கும்


டிசம்பர் 23 வரை எந்த அளவிற்கு வடக்கு நோக்கி நகர்கிறதோ அந்த அளவிற்கு இலங்கையின் வடக்கு பகுதியில் கரை கடக்க வாய்ப்பு இருக்கிறது.


டிசம்பர் 24 தென்மேற்கு திசை நோக்கி திரும்பி வட இலங்கை அருகே அடையும்.


டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் அன்று நன்கமைந்த தாழ்வு பகுதியாக வட இலங்கை வழியாகவோ, மத்திய இலங்கை வழியாகவோ இலங்கையின் மேற்கு பகுதியை அடைத்து மன்னார் வளைகுடா வழியாக நகர்ந்து குமரிக்கடல் வழியாக அரபிக் கடலுக்கு செல்லும். 

டிசம்பர் 23 வரை தேவையான நீரை மட்டும் பாய்ச்சுங்கள்.
டிசம்பர் 24 முதல் மழை படிப்படியாக அதிகரிக்கும். குறிப்பாக டிசம்பர் 25 26 27 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் கனமழை காத்திருக்கிறது.


மத்திய மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் நல்ல மழை வாய்ப்பு தெரிகிறது. கர்நாடக எல்லையோரம் ஆந்திர எல்லை வரும் வரை ஆங்காங்கே ஆங்காங்கே மழை இருக்கும். வடகடலோரம் கூட நல்ல மழை பொழிவு எதிர்பார்க்கலாம்.
டிசம்பர் 28 29 தேதிகளில் அரபிக்கடலில் சென்று கிழக்கு காற்றில் இருக்கும் என்பதால் மழை பொழிவு டிசம்பர் 29 வரை ஆங்காங்கே ஆங்காங்கே தொடரும்.


*டிசம்பர் 25 நிகழ்வு நெருங்கி கரை ஏறும் வரை நல்ல மழை பொழிவை கொடுக்கும். பிறகு
நிகழ்வு டிசம்பர் 25 பிற்பகல் அல்லது இரவு  இலங்கை தரை ஏறி நிற்கும் பொழுது தீவிரம் குறைந்து இருந்தாலும் மன்னார் வளைகுடாவில் இறங்கி குமரி கடல் செல்லும் வரை நிறைய மழைப்பொழிவு வாய்ப்பு இருக்கிறது.


நிகழ்வு எந்த அளவிற்கு இலங்கையின் வடக்கு முனையில் கடக்கிறதோ அந்த அளவிற்கு டெல்டா மாவட்டங்களின் மழைப்பொழிவு கூடும் அதேபோல் குமரிமுனையை எந்த அளவிற்கு நெருங்கி வருகிறதோ அந்த அளவிற்கு தென்மாவட்டம் மழை பொழிவு கூடுதலாகும்.



டிசம்பர் 25 26 27 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் லேசான மிதமான காற்று இருக்கும். காற்று அச்சம் வேண்டாம் .தீவிர தாழ்வு பகுதி இலங்கை கடந்து மன்னார் வளைகுடா கடந்து குமரி கடல் வழி அரபிக்கடல் செல்லும் என்பதால் வடகிழக்கு கிழக்கு காற்றின் நுழைவு இருக்கும் . மழைக்கு முன் தொடங்கும் லேசான காற்றை கண்டு துளியும் அச்சப்பட வேண்டாம்.
ந.செல்வகுமார்.



Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details on Agriculture helping platform


Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog