தாழ்வு மண்டலம் வட இலங்கை கரை கடக்கும். காற்றுடன் கனமழை எங்கெங்கே? எப்போது?

0

தாழ்வு மண்டலம் வட இலங்கை  கரை கடக்கும். காற்றுடன்  கனமழை எங்கெங்கே?  எப்போது?



வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் இருபத்தி இரண்டு. வியாழக்கிழமை, இரவு ஏழு மணி, ஒரு நிமிட ஆய்வறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை அறிக்கையை பார்க்கவும். 
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. இது, தொடர்ந்து வடக்கு நோக்கி, தமிழக கரைக்கு, அப்பால், ஐநூத்தி ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலே, வடக்கு நோக்கி நகர்கிறது என்று அறிவித்தபடியே நகர்கிறது. இது, நாளை இரவு வரையும், வடக்கு நோக்கி நகரும். பிறகு, சற்று நிலைபெற்று, தென்மேற்கு நோக்கி திரும்பும், வரக்கூடிய இருபத்தி நான்காம் தேதி, இருபத்தி ஐந்தாம் தேதி, வட இலங்கை கரை கடந்து, மன்னார் வளைகுடா வழியாக, குமரி கடல் பகுதி வழியாக, அரபிக்கடலுக்கு பயணிக்கும். இதன் காரணமாக, வரக்கூடிய இருபத்தைந்தாம் தேதி, அதிகாலையில் இருந்து, மழைப்பொழிவு, வட கடலோரம், டெல்டா மாவட்டங்கள்ல தொடங்கி, பிறகு, தென் மாவட்டங்கள்லையும் தொடங்கி, அனைத்து மாவட்டங்களையும், இருபத்தி ஐந்தாம் தேதி பிற்பகலுக்கு மேல், மழை தொடங்கி, இருபத்தி ஆறு, இருபத்தி ஏழு தேதிகள், அனைத்து மாவட்டங்களுக்கும், நல்ல மழை பொழிவு இருக்கிறது. தென் மாவட்டங்களையும், டெல்டா மலை மாவட்டங்களிலும், மிக கனமழை வாய்ப்பிருக்கிறது. இணைந்திருக்க, வானிலை அறிக்கையுடன்


Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog