டிச 4,5 மழை எங்கே?டிச 8,9,10 & டிச 15,16,17 தீவிர நிகழ்வுகள்கடப்பது எங்கே,?மழை எப்படி?
வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் மூன்று, சனிக்கிழமை இரவு ஏழு மணி நிலவர ஒரு நிமிட ஆய்வறிக்கை. அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கவும். தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், இன்று நல்ல மழை. டெல்டா மாவட்டங்களிலே, குறைவான மழை, ஆங்காங்கே பொழிந்தாலும், தென் மாவட்டங்கள்ல, பல இடங்கள்ல, கனமழை பொழிந்திருக்கிறது இப்பொழுது, அது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் நோக்கி, முன்னேறி வருகிறது. மீண்டும் நள்ளிரவு, அதிகாலையில, தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், மழைப்பொழிவு தொடங்கி, நாளை காலை, டெல்டா மாவட்டங்கள், உள்பகுதி வரைக்கும் முன்னேறி, நாளை பகல்ல, அனைத்து மாவட்டங்களுக்கும், மழைப்பொழிவு முன்னேறி, ஆந்திர எல்லை வரை, கர்நாடக எல்லை வர்ற வரைக்கும், நாளைக்கு ஆங்காங்கே நல்ல மழை பொழிவை கொடுக்கும், ஒதுக்கி, ஒதுக்கி. குறைந்தபட்சம், உயிர் கொடுக்கும் மழை முதல், கனமழை வரைக்கும், ஆங்காங்கே இருக்கும். நாளை இரவுடன், வட கடலோர மாவட்டங்கள், வட உள் மாவட்டங்களில், மழை நிறைவடையும். தென் மாவட்டங்களுக்கு, திங்கட்கிழமை வரை இருக்கு. டெல்டா மாவட்டங்களுக்கு, திங்கட்கிழமை காலை வரை இருக்கு அடுத்த நிகழ்வு, எட்டாம் தேதி வந்து, ஒன்பது, பத்து தேதி வரைக்கும், கன மிக கனமழையை கொடுக்கும். கடலில் இருக்கும்போது, புயலாக இருந்து, செயலிழந்து, கரை கடக்கும், அதிக மழைப்பொழிவை கொடுக்கும். விளக்கு அறிக்கை பார்த்து, பயன்பெறுக
