Hot Posts

வட கடலோரம் நெருங்கும் தாழ்வு மண்டலம்,மழை தருவது எங்கெங்கே? உங்களுக்கு எப்படி?

வட கடலோரம் நெருங்கும் தாழ்வு மண்டலம்,மழை தருவது எங்கெங்கே? உங்களுக்கு எப்படி?

2022 வடகிழக்குபருவ மழை. ஜனவரி முடிய
எப்படி?20.11.22 அப்டேட்.



20.11.2022-4AM தமிழ்நாடு காலை வானிலை ஆய்வறிக்கை




விதைப்பு விவசாயிகளுக்கு ஆலோசனை.
20.11.22-4AM வெளியீடு





வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் இருபது, ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை நிலவர, ஒரு நிமிட வானிலை அறிக்கை. 

வங்கக்கடலில் உருவாகி இருக்கக்கூடிய, நன்கு அமைந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகி, வட கடலோரத்துக்கு நெருங்கி வர இருக்கிறது. இதன் காரணமாக, இன்றைக்கு இருபதாம் தேதி இரவு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மழைப்பொழிவு தொடங்கி, படிப்படியாக இரண்டு நாட்களுக்கு மழைப்பொழிவு அதிகரித்து, தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும்.


 அதே நேரத்துல,நாளை இருபத்தி ஒன்று, இருபத்தி இரண்டாம் தேதி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மற்றும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மற்றும், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும், மழை பொழிவை கொடுக்கும். ஆனால், புதுச்சேரிக்கு வடக்கே, விழுப்புரத்திற்கு வடக்கே, திருக்கோவிலூருக்கு வடக்கே, செங்கத்திற்கு கிழக்கே, திருப்பத்தூருக்கு கிழக்கே உள்ள பகுதிகள், நல்ல மழைப்பொழிவு கொடுக்கும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரிக்கும், மழைப்பொழிவு கொடுக்கும் அதே போல, ஒரு சில இடங்கள்ல இருக்கும், கடலூருக்கும் வாய்ப்பிருக்கிறது, பரவலாக இருக்கிறது, ஆங்காங்கே இருக்கும். கள்ளக்குறிச்சிக்கும், ஆங்காங்கே இருக்கும்.இந்த நிகழ்வு செயலிழந்து, தென் மாவட்டங்களை நோக்கி, காற்று சுழற்சியாக வந்து, பனிப்பொழிவுக்கு இடையே, ஆங்காங்கே, ஆங்காங்கே இருபத்தி ஒன்பதாம் தேதி வரை, மழைப்பொழிவு கொடுக்கும்.


 அடுத்த நிகழ்வு, டிசம்பர் ஒன்று, இரண்டு, மூன்றில் வரும். அடுத்த நிகழ்வு, ஏழாம் தேதி. பருவமழைகள் இருக்கிறது. பொங்கல் வரை, இணைந்திருக்க, நன்றி


Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform








Post a Comment

0 Comments

Search This Blog