வரும் நாள்கள் மழை எங்கே? பருவ மழை தீவிரம் எப்போது?

0

 வரும் நாள்கள் மழை எங்கே? பருவ மழை தீவிரம் எப்போது?



வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் இருபத்தி இரண்டு, செவ்வாய்கிழமை இரவு ஒரு நிமிட ஆய்வறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கும், இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை அறிக்கையை பார்க்கவும். 


சென்னை அருகே நெருங்கி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், செயலிழந்து, நஞ்சம் மிகுந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக, தெற்கு மற்றும் வட தமிழகத்தை ஒட்டி கடல் பகுதியிலே நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனால மழைப்பொழிவுன்னு பார்த்தீங்கன்னா, விழுப்புரம் மாவட்டத்துல செஞ்சில இரண்டு சென்டிமீட்டர் மழை அவ்வளவுதான். திருவண்ணாமலை மாவட்டத்திலும், விழுப்புரம் மாவட்டத்திலயும் ஆங்காங்கே தலா ஒரு சென்டிமீட்டர் மழை பொழிந்திருக்கிறது திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள்ல துளி அளவு கூட மழை இல்லை. அதாவது, மீமி அளவுலதான் மழை. செமீ க்கே எட்டலை. அந்த அளவுக்கு மழைப்பொழிவு. இந்த நிகழ்வானது, இருபத்தி நான்காம் தேதி, நாளை மறுதினம், செயலிழந்து, காற்று சுழற்சியாக, தமிழகத்தின் உள் மாவட்டங்கள் வழியாக, மேற்கு தொடர்ச்சி மலை வழியாக, அரபிக்கடலின் நகரும் என்பதனால, உள் மாவட்டங்களில்  உயரக்கூடிய வெப்பநிலை காரணமாக, வெப்ப சலன மழை போல, வரக்கூடிய இருபத்தி நாலாம் தேதியிலிருந்து, இருபத்தி எட்டாம் தேதி வரைக்கும், ஆங்காங்கே, ஆங்காங்கே, ஒரு சில இடங்கள், மழைப்பொழிவு, ஆங்காங்கே, ஆங்காங்கே கொடுக்கும். வலிமையான நிகழ்வு, பருவமழை எல்லாம் இருக்கிறது என்பதையும், விரிவான அறிக்கையில் பார்த்து, புரிந்து கொள்ளுங்க. நன்றி


Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform








Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog