இன்று மழை எங்கே? வரும் நாள்கள் எங்கே? ஜனவரி முடிய எப்படி?

0

 இன்று மழை எங்கே? வரும் நாள்கள் எங்கே?
 ஜனவரி முடிய எப்படி?





வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் இருபத்தி ஏழு, ஞாயிற்றுக்கிழமை, மாலை ஐந்து மணி நிலவரம் வரை, ஒரு நிமிட ஆய்வு அறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை அறிக்கையை பார்க்கவும். இன்றைய மழைப்பொழிவு பார்த்தீங்கன்னா, டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள்ல, ஆங்காங்கே ராமநாதபுரம் உள்ளிட்ட, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், அதே போல, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களையும், ஆங்காங்கே மழைப்பொழிவு காணப்படுகிறது, ஈரோடு மாவட்டம் உட்பட. இம்மா, இந்த மழைப்பொழிவானது, நாளையும், தென் மாவட்டங்கள், மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்ல இருக்கும். இருபத்தி ஒன்பதாம் தேதியும், ஆங்காங்கே இருக்கும். முப்பதாம் தேதி, இடைவெளி கொடுக்கும், இந்த சுற்றின் மழைப்பொழிவு, ஆங்காங்கே, ஆங்காங்கே, ஒதுக்கி, ஒதுக்கி பெய்யக்கூடிய மழையால், உயிர் கொடுக்கும் வழியாவது கிடைக்கும். வறட்சியாக இருக்கக்கூடிய பகுதிகளுக்கு. கண்டிப்பாக இந்த மூன்று நாட்கள்ல கிடைக்காவிட்டால், இரண்டாம் தேதியிலிருந்து அடுத்த சுற்று காற்று சுழற்சி வந்து மழை பொழிவை கொடுக்க இருக்கிறது. December இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, நான்கு, December இரண்டு, மூன்று, நான்கு தேதிகள்ல, மீண்டும் அடுத்த சுற்றின் மழைப்பொழிப்பு, கண்டிப்பாக கடலோரம், வேதாரண்யம் பகுதி உட்பட மழைப்பொழிவை கொடுக்கும். டிசம்பர் இரண்டு, மூன்று, நான்கு தேதிகளிலே. அடுத்த நிகழ்வு, ஏழாம் தேதியிலிருந்து, வலுவான நிகழ்வுகள், அடுத்தடுத்து இருக்கின்றன. பொங்கல் வரை, மழைப்பொழிவு இருக்கிறது. கண்டிப்பாக, நம்பியுடன் இருங்கள். நன்றி



Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform

Facebook: https://fb.me/vayalumvaanamum2

Twitter : https://twitter.com/vayalum

Telegram: https://t.me/vayalumvanamum

Website: https://vayalumvaanamun.in


Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog