தாழ்வு மண்டலமாகி வடக்கே வந்து செயலிழந்து தெற்கே திரும்பும்.
நவ 26 வரை வானிலை எப்படி?
வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் பதினெட்டு, வெள்ளிக்கிழமை, மாலை ஆறு மணி, ஒரு நிமிட ஆய்வறிக்கை, நேற்று இரவு, நேற்று இரவும், செங்கோட்டையில், ஒன்பது செமீ மழை, இன்னும் பல இடங்கள்ல, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில், தேனி மாவட்டத்தின், தெற்கு பகுதியிலேயும் மழை பொழிந்திருக்கிறது. வங்கக் கடலில் உருவாகியிருக்கக் கூடிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று நண்டு அமைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, தீவிரமடைய இருக்கிறது. இது, வரக்கூடிய இரண்டு நாட்களுக்கு, தாழ்வு மண்டலமாக இருந்து, வட கடலோரப் பகுதிகளுக்கு, மழை பொழிவைக் கொடுக்கும். கன மிக கனமழையை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, புதுச்சேரி. கடலூர் மாவட்டத்தின் வடக்கு பகுதிக்கு, மிக கனமழையை கொடுக்கும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது. இருபதாம் தேதி மதியம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில், தொடங்கும் மழை, பிறகு இருபதாம் தேதி, இரவு, இருபத்தி ஓறாம் தேதி, அதிகாலை, இந்த பகுதியில, மழைப்பொழிவு கொடுக்கும். கிருஷ்ணகிரி, தர்மபுரி வரைக்கும் மழை பொழிவை கொடுக்கும். பிறகு செயலிழந்து, இருபத்தி மூன்றாம் தேதிக்கு பிறகு, டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு, மழைப்பொழிவு, இருபத்தி ஆறாம் தேதி வரைக்கும் கொடுக்கும். இந்த சுற்றின் மழைப்பொழிவு, இருபத்தி ஆறாம் தேதி வரை இருக்கிறது. செயலிழந்து, குளிர் மழையை கொடுக்கும். நன்றி
Facebook: https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamun.in
