கரையை கடந்த புயல். இன்று மழை எங்கே? தமிழக தொடர் மழை தொடக்கம் எப்போது?
2022, அக்டோபர் 25, செவ்வாய்கிழமை, அதிகாலை பதிவு. வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த, புயலானது, வங்கதேசம் கரை கடந்து, தற்பொழுது, வடகிழக்கு மாநிலங்களுக்குள்ளே, நுழைஞ்சு கொண்டிருக்கிறது. தற்பொழுது, மேக அளவில், நுழைய தொடங்கிட்டு இருக்கிறது. அடுத்தது, அஸ்ஸாம் , அடுத்தது ஆந்த்ரா பிரதேசம் என்று வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிக மழை கொடுக்க இருக்கிறது. பிறகு நாளை முற்றிலுமாக செயலிழக்கும். நாளையிலிருந்து மெல்ல வடகிழக்கு காற்று தொடங்கும். தொடங்கும். நேற்றைக்கு வரைக்கும் தமிழகத்துல தென் மாவட்டங்கள்ல மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு தென்மாவட்ட மழைக்கு இடைவெளி. கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு.இலங்கையில, ஆங்காங்கே மழை இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரைக்கும், இந்த இருபத்தி ஆறாம் தேதிக்கு பிறகு, மெல்ல, வடகிழக்கு காற்றுக்குள்ளே நுழையும்பொழுது, தென் மாவட்டங்கள்ல போய், லேசான மிதமான மழையை கொடுக்கும். வட கடலோரத்திலும், லேசான கொடுக்கும். இருபத்தி ஏழுக்கு மேல், படிப்படியாக, வட கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள்ல, மழைப்பொழிவு தென்மாவட்டங்கள்ல அதிகரித்து, பிறகு அனைத்து மாவட்டங்கள்லையும், 29,30,31 தேதி, கனமழை காத்திருக்கிறது. ஆக, அடுத்தது November, Decemberலாம், தமிழகத்துல, சீரான மழையை, கொடுக்க இருக்கிறது. விரிவான அறிக்கையை பார்த்து, பயன்பெற, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
