2024 நவம்பர் 11 முதல் டிசம்பர் 31 முடிய
வானிலை எதிர்பார்ப்பு.
தென்மேற்கு வங்கக்கடல் காற்று சுழற்சியும் அந்தமான் காற்று சுழற்சியும் இணைய விலகி செல்லும் என்பதால் நவம்பர் 9,10 சனி, ஞாயிறு தமிழ்நாட்டில் பெரிதாக மழை இருக்காது.
நவம்பர் 9 சனிக்கிழமை காலை தெளிவான வானம் காணப்பட்டாலும்,
காலை 8 மணிக்கு மேல் வெப்பம் உயர்ந்ததும் திருவள்ளூர், சென்னை,செங்கல்பட்டு மாவட்டங்களின் கடலோரம் ஆங்காங்கே லேசான /மிதமான மழை பெய்யும்.
காலை 10 மணிக்கு மேல் மதியம், மாலை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு,, காஞ்சிபுரம்,விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்,புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திருச்சி அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான /மிதமான மழை பெய்யும். பரவலாக இருக்காது
நவம்பர் 10 ஞாயிறு மழை வாய்ப்பு குறைவு.
நவம்பர் 11 முதல் மீண்டும் தொடங்கி படிப்படியாக தீவிரம்
*
இணைந்த தாழ்வு சுழற்சியாக மேற்கு நோக்கு வந்து நவம்பர் 11 மதியம் முதல் மழையை தொடங்கும். குறிப்பாக நவம்பர் 11 முதலில் வடகடலோரம் தொடங்கும்.
தாழ்வு அமைவு மேலும் மேற்கு நோக்கி வந்து மேற்கு வட தமிழ்நாடு மற்றும் டெல்டா இடையே நவம்பர் 13 புதன் கரையை கடந்து தமிழ்நாடு வளிமண்டலம் வழியாக நவம்பர் 14 அரபிக்கடல் செல்லும். அரபிக்கடல் சென்றாலும் அரபிக்கடலில் கீழடுக்கு சுழற்சியும் தமிழ்நாடு வங்கக்கடலோரம் மேலடுக்கு சுழற்சியும் நீடித்து நவம்பர் 14,15,16,17 தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலான மழை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், கர்நாடக எல்லையோர மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களில் நவம்பர் 14,15,16 தேதிகளில் நல்லமழையும் ஆங்காங்கே கன, மிக கனமழையும் தெரிகிறது.
நவம்பர் 13,14,15,16 தேதிகளின் சில நாள்கள் இந்தியா வானிலை நிறுவனம் Red Alert கொடுக்கவும் வாய்ப்புள்ளது.
ஒருசில இடங்களில் பெய்யும் என்று எதிர்பார்க்கும் மிக கன மழைக்கான Red Alert ஆக இருக்கும். அச்சம் வேண்டாம். பரவலாக நல்ல மழை பொழியும்.
வங்கக்கடலுக்கு தெற்கே MJO வரும் என்பதால் நவம்பர் இறுதி வாரம் மற்றும் டிசம்பர் மாதம் அடுத்தடுத்த வலுவான நிகழ்வுகளால் நிறைய மழை தரும்.
