காற்றின் போக்குவரத்து அதனால் ஏற்படும் இரு காற்றுகள் இணைவு அடிப்படையில் மழை வானிலை மாறி அமையும்.
வானிலை அமைப்பு
*(1) தென்கிழக்கு வங்கக்கடலில் நீடிக்கும் காற்று சுழற்சி நவம்பர் 6,7 இல் தாழ்வு பகுதியாக உருவாகி நவம்பர் 9,10 இல் வட கடலோரம் நெருங்கி தெற்கு நோக்கி நகர்ந்து நவம்பர் 11,12,13, 14 இல் மன்னார்வளைகுடா தென் தமிழ்நாடு வழி அரபிக்கடல் நோக்கி நகரும்.
(2)அரபிக்கடலில் லட்சத்தீவு மேலே நீடித்த வளி மண்டல சுழற்சி மேற்கு நோக்கி விலகி செல்லத்தொடங்கியது .
(3) இலங்கை மேலே நீடித்த வளி மண்டல சுழற்சி அந்தமான் சுழற்சியுடன் இணையப் போகிறது..
மீனவர்களுக்கான வானிலை அறிக்கை
5.11.2024-தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்.
6.11.2024 முதல்
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 கிமீ
முதல் 45 கிமீ வேக காற்று இடையிடையே 55 கிமீ வேகத்தில் காற்று வீசும்.
இலங்கைக்கான வானிலை அறிக்கை
நவம்பர் 5, 6 ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு.
நவம்பர் 7 இல் மழை தொடங்கி, அவ்வப்போது பெய்து படிப்படியாக அதிகரிக்கும்.