3.10.2024-4AM ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை தொகுப்பு:*
*
அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை அறிக்கையை பார்க்கவும்.
*
தற்போது தென்மேற்கு பருவமழை முடியாவிட்டாலும்
வடகிழக்கு பருவமழை தொடங்கா விட்டாலும்
அக்டோபர் 1 முதல் பொழியும் மழைப் பொழிவானது வடகிழக்கு பருவமழை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை -2024
*ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 முடிய உங்கள் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம்.
*இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இயல்பை விட 18% கூடுதலான மழையை கொடுத்திருக்கிறது.
பதிவான மழை - 389.2 மி.மீ
இயல்பு மழை - 328.5 மி.மீ
*18% கூடுதல் மழை பொழிந்துள்ளது *
முதலிடம்
திருநெல்வேலி மாவட்டம்
பதிவான மழை - 337.9 மி.மீ
இயல்பு மழை - 92.5 மி.மீ
(➕265%)
இரண்டாமிடம்
தென்காசி மாவட்டம்
பதிவான மழை 272.9 மி.மீ
இயல்பு மழை 172.7 மி.மீ
(➕58%)
மூன்றாமிடம்
தேனி மாவட்டம்
பதிவான மழை - 376.2 மி.மீ
இயல்பு மழை - 237.9 மி.மீ
(➕58%)
நான்காமிடம்
ராணிப்பேட்டை மாவட்டம்
பதிவான மழை - 672.9 மி.மீ
இயல்பு மழை 441.7 மி.மீ
(➕52%)
*
ஐந்தாமிடம்
நீலகிரி மாவட்டம்
பதிவான மழை 1273.9 மி.மீ
இயல்பு மழை 842.4 மி.மீ
(➕51%)
ஆறாமிடம்
விருதுநகர் மாவட்டம்
பதிவான மழை - 289.0 மி.மீ
இயல்பு மழை - 196.4 மி.மீ
(➕47)
ஏழாமிடம்
சென்னை
பதிவான மழை- 641.6 மி.மீ
இயல்பு மழை - 448.5 மி.மீ
(➕43%)
எட்டாமிடம்
புதுச்சேரி
பதிவான மழை - 553.8 மி.மீ
இயல்பு மழை - 387.8 மி.மீ
(➕43%)
ஒன்பதாமிடம்
கோயம்புத்தூர் மாவட்டம்
பதிவான மழை- 970.3 மி.மீ
இயல்பு மழை - 689.1மி.மீ
(➕41%)
பத்தாமிடம்
திருவள்ளூர் மாவட்டம்
பதிவான மழை - 655.7 மி.மீ
இயல்பு மழை - 463.7 மி.மீ
(➕41%)
பதினொன்றாவது இடம்
செங்கல்பட்டு மாவட்டம்
பதிவான மழை - 548.5 மி.மீ
இயல்பு மழை - 398.3 மி.மீ
(➕38%)
பன்னிரண்டாம் இடம்
விழுப்புரம் மாவட்டம்
பதிவான மழை - 538.7 மி.மீ
இயல்பு மழை - 395.0 மி.மீ
(➕36%)
*
பதின்மூன்றாவது இடம்
காஞ்சிபுரம் - மாவட்டம்
பதிவான மழை - 639.0 மி.மீ
இயல்பு மழை - 472.0 மி.மீ
(➕35%)
பதினான்காவது இடம்
திருப்பூர் மாவட்டம்
பதிவான மழை 206.9 மி.மீ
இயல்பு மழை 155.9 மி.மீ
(➕33%)
பதினைந்தாவது இடம்
தூத்துக்குடி மாவட்டம்
பதிவான மழை 85.4 மி.மீ
இயல்பு மழை 67.3 மி.மீ
(➕27%)
பதினாறாவது இடம்
சிவகங்கை மாவட்டம்
பதிவான மழை 404.6 மி.மீ
இயல்பு மழை 316.7 மி.மீ
(➕28%)
பதினேழாவது இடம்
திருவண்ணாமலை மாவட்டம்
பதிவான மழை 554.2 மி.மீ
இயல்பான மழை 450.5 மி.மீ
(➕23%)
பதினெட்டாவது இடம்
வேலூர் மாவட்டம்
பதிவான மழை - 527.4 மி.மீ
இயல்பு மழை - 431.3 மி.மீ
(➕22%)
பத்தொன்பதாவது இடம்
புதுக்கோட்டை மாவட்டம்
பதிவான மழை 338.0 மி.மீ
இயல்பு மழை - 294.8 மி.மீ
(➕15%)
இருபதாவது இடம்
கடலூர் மாவட்டம்
பதிவான மழை - 406.1 மி.மீ
இயல்பு மழை - 355.7 மி.மீ
(➕14%)
இருபத்தோராவது இடம்
ராமநாதபுரம் மாவட்டம்
பதிவான மழை 149.8 மி.மீ
இயல்பு மழை - 132.1 மி.மீ
(➕13%)
இருபத்து இரண்டாவது இடம்
சேலம் மாவட்டம்
பதிவான மழை - 456.5 மி.மீ
இயல்பு மழை - 406.4 மி.மீ
(➕12%)
இருபத்து மூன்றாவது இடம்
திண்டுக்கல் மாவட்டம்
பதிவான மழை - 332.6 மி.மீ
இயல்பு மழை - 301.5 மி.மீ
(➕10%)
இருபத்து நான்காவது இடம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
பதிவான மழை 376.6 மி.மீ
இயல்பு மழை - 356.2 மி.மீ
(➕6%)
இருபத்து ஐந்தாவது இடம்
கரூர் மாவட்டம்
பதிவான மழை 211.8 மி.மீ
இயல்பு மழை - 201.6 மி.மீ
(➕5%)
இருபத்து ஆறாவது இடம்
மதுரை மாவட்டம்
பதிவான மழை - 311.7 மி.மீ
இயல்பு மழை 296.1 மி.மீ
(➕5%)
இருபத்து ஏழாவது இடம்
கன்னியாகுமரி மாவட்டம்
பதிவான மழை - 503.6 மி.மீ
இயல்பு மழை - 494.7 மி.மீ
(➕2%)
இருபத்து எட்டாவது இடம்
திருப்பத்தூர் மாவட்டம்
பதிவான மழை 433.8 மி.மீ
இயல்பு மழை - 425.7 மி.மீ
(➕2%)
இருபத்து ஒன்பதாவது இடம்
ஈரோடு மாவட்டம்
பதிவான மழை - 261.7 மி.மீ
இயல்பு மழை - 267.6 மி.மீ
(➖2%)
முப்பதாவது இடம்
பெரம்பலூர் மாவட்டம்
பதிவான மழை 262.6 மி.மீ
இயல்பு மழை 277.8 மி.மீ
(➖5%)
முப்பத்து ஒன்றாவது இடம்
தர்மபுரி மாவட்டம்
பதிவான மழை - 338.5 மி.மீ
இயல்பு மழை - 380.8 மி.மீ
(➖11%)
முப்பத்து இரண்டாவது இடம்
நாமக்கல் மாவட்டம்
பதிவான மழை 280.9 மி.மீ
இயல்பு மழை 331.8 மி.மீ
(➖15%)
முப்பத்து மூன்றாவது இடம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
பதிவான மழை -334.7 மி.மீ
இயல்பு மழை - 399.1
(➖16%)
முப்பத்து நான்காவது இடம்
தஞ்சாவூர் மாவட்டம்
பதிவான மழை - 243.9 மி.மீ
இயல்பு மழை - 302.8 மி.மீ
(➖19%)
முப்பத்து ஐந்தாவது இடம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
பதிவான மழை - 222.2 மி.மீ
இயல்பு மழை - 276.3 மி.மீ
(➖20%)
முப்பத்து ஆறாவது இடம்
அரியலூர் மாவட்டம்
பதிவான மழை 252.5 மி.மீ
இயல்பு மழை - 314.8 மி.மீ
(➖20%)
முப்பத்து ஏழாவது இடம்
திருவாரூர் மாவட்டம்
பதிவான மழை - 210.5 மி.மீ
இயல்பு மழை - 297.2 மி.மீ
(➖29%)
முப்பத்து எட்டாவது இடம்
மயிலாடுதுறை மாவட்டம்
பதிவான மழை 205.0 மி.மீ
இயல்பு மழை 304.7 மி.மீ
(➖33%)
*
முப்பத்து ஒன்பதாவது இடம்
காரைக்கால் மாவட்டம்
பதிவான மழை - 169.5 மி.மீ
இயல்பு மழை - 299.5 மி.மீ
(➖43%)
நாற்பதாவது இடம்
நாகப்பட்டினம் மாவட்டம்
பதிவான மழை 123.1 மி.மீ
இயல்பு மழை 246.6 மி.மீ
(➖50%
தமிழ்நாடு 38 மாவட்டங்கள்
புதுச்சேரி & காரைக்கால் சேர்த்து
மொத்தம் 40 மாவட்ட பகுதிகள்.
விரிவான வானிலை அறிக்கை.
*
தமிழ்நாட்டில் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில்
கோடை காலம் போல
அனல் வெப்பம் வீசுவதற்கு காரணம் என்ன?
பொதுவாக மார்ச் 21 நில நாட்டுக்கோட்டிற்கு வரும் சூரியனின் செங்குத்துக் கதிர் ஏப்ரல் மே மாதங்களில் தமிழ்நாடு வழியாக ஜூன் 21 இல் வட மாநிலங்கள் பயணிக்கும் கற்பனை கோடு கடக ரேகையில் விழுந்து மீண்டும் நில நடுக்கோட்டை நோக்கி பயணித்து செப்டம்பர் 21 நில நாடுக்கோட்டில் விழும்.
ஏப்ரல் மே அடுத்து ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் தமிழ்நாட்டிலும் அதன் அருகிலும் செங்குத்து கதிர் விழும்.
அக்டோபர் முதல் வாரம் நில நடுக்கோட்டை விட்டு விலகி மகர ரேகை நோக்கி பயணிக்கும்.
ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் முற்பகுதி மாதங்களில் தென்மேற்கு பருவக்காற்று ஈரக்காற்றாக கேரளா, தமிழ்நாடு வழியாக பயணிக்கும் என்பதால் வெப்பம் தெரியாது.
மிகவும் குறைந்த வேகத்தில் மேற்கில் இருந்து வரும் காற்றும் வெப்பம் அடைந்து அனல் காற்றாக கடலோரம் வந்தடைக்கிறது.
இதன் காரணமாக வெப்பம் மிகுந்த ஏப்ரல் மே கோடை போல வெயில் சுட்டெரிகிறது.
இடிமழை எதிர்பார்ப்புகள்.:
அக்டோபர் 3
டெல்டா தவிர பிற அனைத்து மாவட்டங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே சென்னை, திருச்சி, மதுரை, கோவை உட்பட மாலை இரவு இடி மழை பொழியும்.
*அக்டோபர் 4 முதல் அக்டோபர் 16 முடிய *
டெல்டா மாவட்டங்கள், தென் கடலோரம் உட்பட மேற்கு தொடர்ச்சி மலை முதல் வங்கக் கடலோரம் வரை அனைத்து மாவட்டங்களிலும் மாலை இரவு நேரங்களில் ஆங்காங்கே ஆங்காங்கே பொழிந்து அனைத்து இடங்களில் அடுத்தடுத்த மணி நாள்களில் பொழியும்.
இந்த நாள்களில் தென் இந்தியா முழுவதும் ஆங்காங்கே பொழியும்.
அக்டோபர் 11,12 ஆயுதபூஜை விஜய தசமி மழை வானிலை தெரிகிறது.
2024 தென் மேற்கு பருவமழை அக்டோபர் 14, 15 முடிவுக்கு வரும்.
கடல் வெப்பம் லா -நினா அமைப்பும் நெகடிவ் IOD அமைப்பும்
*
இந்தியப் பெருங்கடல் IOD அக்டோபர் முதல் நடுநிலையில் இருந்து நெகடிவ் IOD அடையும்.
பசிபிக்கடல் அக்டோபர் முதல் லா-நினா அமைப்பை அடையும்.
ஆக பசிபிக் கடலின் ஆசிய நாடுகளின் பகுதி வெப்பம் அதிகரிக்கும்,வங்கக்கடல் , அதற்கு தெற்கே உள்ள நில நடுக்கோட்டு இந்தியப் பெருங்கடல் வெப்பம் உயர்ந்து இருக்கும் என்பதால் 2024 அக்டோபர் முதல் ஜனவரி முடிய தென் சீனா கடல் நிகழ்வு வங்கக்கடலுக்கு வலுவாக வரும்.
காற்று திசை மாறும் காலம் :
அக்டோபர் 15,16
வடகிழக்கு பருவமழை.
அக் 17,18 இல் தொடங்கும்.
இக்காலத்தில் வலுவான நிகழ்வுகள் வலுவான மழை தரும் வடகிழக்கு பருவமழை சராசரிக்கும் கூடுதல் தரும் என்றே தெரிகிறது.
மழை அமைவு எதிர்பார்ப்பு :
அமைவு 1
அக்டோபர் 18 முதல் 25 முடிய தென் மாநிலங்கள் பரவலாக மிதமானது முதல் சற்று கனமழை வரை.
அமைவு 2
அடுத்த நிகழ்வு உருவாகி அக்டோபர் 28 முதல் நவம்பர் 4 முடிய நல்ல மழை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி தெரிகிறது.
அக்டோபர் 31 தீபாவளி நாள்களில் மழை தெரிகிறது.
அமைவு 3
நவம்பர் 7 முதல் நவம்பர் 14 வலுவான நிகழ்வுகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உட்பட நல்ல மழை வாய்ப்பு தெரிகிறது.
நவம்பர் 15, 16,17, 18 நல்ல மழை தெரிகிறது.
அமைவு 4
நவம்பர் 22,23,24,25,26 மீண்டும் வலுவான நிகழ்வுகள் அனைத்து மாவட்டங்களில் அதிக மழை தெரிகிறது.
அமைவு 5
நவம்பர் 27 முதல் டிசம்பர் 10 முடிய வலுவான நிகழ்வுகள் நல்ல மழை தெரிகிறது.
அமைவு 6
டிசம்பர் 14 முதல் டிசம்பர் 23 முடிய மன்னார் வளைகுடா தென் தமிழ்நாடு வழி அரபிக்கடல் நிகழ்வு நல்ல மழை.
அமைவு 7
டிசம்பர் 26 முதல் 31 இலங்கை, குமரிக் கடல் நிகழ்வு.
அமைவு 8
ஜனவரி முதல் வாரம் நிலநடுக்கோட்டு இந்தியப் பெருங்கடல் குமரிக் கடல் நிகழ்வு தென் மாவட்ட மிதமான மழை வாய்ப்பு.
*குறிப்பு 2024 வட கிழக்கு பருவமழை காலத்தில் வலுவான நிகழ்வுகள் அடுத்தடுத்து வரும், ஒரு நிகழ்விற்கும் அடுத்த நிகழ்விற்கும் இடைவெளி இருக்கும். வலுவான நிகழ்வுகள் வடகிழக்கு மாநிலங்கள் முதல் தமிழ்நாடு வரை மழை கொடுக்கும். நவம்பர் மற்றும் டிசம்பர் முற்பகுதி நிகழ்வுகள் வட மாவட்டங்கள் மத்திய மாவட்டங்களில் அதிக மழை தரும். டிசம்பர் பிற்பகுதி தென் மாவட்டங்களில் அதிக மழை தரும். ஒவ்வொரு நிகழ்வும் கடக்கும் இடம் ஒன்றாக இருக்கும், மழை தரும் இரு காற்று இணையும் இடம் வேறு இடமாக இருக்கும். ஒவ்வொரு நிகழ்வும் ஒரு குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பொழிவை தரும். அரபிக்கடல் காற்று வங்கக்கடல் வரும் என்பதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், கேரளா, கர்நாடகா பகுதிகளுக்கும் நல்ல மழை தரும்.
தினசரி அப்டேட்ஸ் வழங்கப்படும் மாறுதல், துல்லியம் அறிந்து பணிசெய்து லாபம் அடைய கேட்டுக்கொள்கிறேன்.*
ந. செல்வகுமார்
1.10.2024-4AM
வெளியீடு