தொடரும் இடியுடன் கனமழை,உங்களுக்கு எப்போது?

0
3.6.2024-4AM  வானிலை தகவல் தொகுப்பு

2024 தென் மேற்கு பருவமழை ந. செல்வகுமார் ஆய்வறிக்கை




தென்மேற்கு பருவமழை மே 30 கேரளாவில் தொடங்கிய நிலையில் சாதாரண தென்மேற்கு பருவக்காற்று மட்டும் நுழைந்து லேசான மிதமான மழை கேரளாவில் பெய்கிறது.*
 கேரள வழியாக தமிழ்நாட்டில் நுழையும் தென்மேற்கு காற்று  மற்றும் அதில் உள்ள ஈரம் வெப்பத்தால் மேலெழுந்து தமிழ்நாட்டில் நுழைவு. போது தமிழ்நாட்டில் நீடிக்கும் வளி மண்டல சுழற்சி குளிர்வித்து மழை பொழிவை ஏற்படுத்துகிறது.

ஜூன் 3  திங்கள் அதிகாலை டெல்டா கடலோரம், தென் கடலோரம். தூறல் லேசான மழை கொடுக்கும்.
ஜூன் 3,4 மாலை இரவு கடலோரம் தவிர பிற மாவட்டங்கள் ஆங்காங்கே ஆங்காங்கே மழை இருக்கும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட கடலோரம் வாய்ப்பு இருக்கிறது.

ஜூன் 5,6 மாலை இரவு கடலோரம் காற்று பகுதிகள் உட்பட ஆங்காங்கே மழை இருக்கும்.

ஜூன் 7,8 மாலை இரவு கடலோரம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை கொடுக்கும்.
ஜூன் 9 முதல் 12 வரை  கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் மழை தீவிரம் குறைந்து ஒரு சில இடங்களில் மட்டும் இருக்கும்.

ஜூன் 13 முதல் மீண்டும் மாலை இரவு மழை படிப்படியாக தீவிரம் அடையும். ஜூன் 15 முதல் கேரளாவில் தென் மேற்கு பருவ மழையும் தமிழ்நாட்டில் காற்று சுழற்சி மழையும் தீவிரமடையும்.
ஜூலை முற்பகுதி தீவிரம் குறைந்தும் ஜூலை பிற்பகுதி தீவிரம் கூடி காணப்படும்.

ஆகஸ்ட், செப்டம்பர் தென மேற்கு பருவமழை அவ்வப்போது தீவிரம் கூடி அணைகளுக்கு நீர் வரத்தை கூட்டும். ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் மாதத்தில் மேட்டூர் உள்ளிட்ட அணைகள் நல்ல நீர்மட்டம் எட்டும்.

தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை காலத்தில் காற்று சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும் சராசரிக்கும் கூடுதல் மழை கிடைக்கும்.

மேட்டூர் நிலவரம்:

ஜூன் 3 இல் 15.5  TMC யாக இருக்கும் நீர் இருப்பு
.
ஜூன் 12 வரை 1.5 TMC  வரை குறைந்து ஜூன் 12 இல் 14 TMC இருப்பை அடையும்.
இந்த நீர் இருப்பு என்பது 10 நாள் பாசனத்திற்கு மட்டும் போதுமானதாகும்.
இதற்கிடையே குடிநீர் தேவை இருக்கிறது
.
ஜூன், ஜூலை அணைகளுக்கு நீர் வார்த்து கொடுக்கும் வகையில் பருவ மழை இருக்கும் ஆனால் நிரப்பும் அளவிற்கு அதிகம் இருக்காது.

டெல்டா குறுவை சாகுபடி ஆற்று பாசன வாய்ப்பு குறைவு.
ஏரி, குளங்கள், ஆழ்துளை கிணறு ஆகிய நீர் ஆதாரங்கள் கொண்டு மட்டும் குறுவை சாகுபடி செய்ய முடியும்.
ஜூன், ஜூலை மாதங்களில் ஆறுகளில் பாசனத்திற்கு நீர் கிடைக்காவிட்டாலும் ஆங்காங்கே மழை இருக்கும்.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நல்ல நீர்வரத்து கொடுக்கும்.

இந்தியப் பெருங்கடல் IOD செப்டம்பர் முதல் நடுநிலையில் இருந்து நெகடிவ் IOD அடையும்.

பசிபிக்கடல் எல்-நினோ செப்டம்பர் மாத லா-நினா அமைப்பை அடையும்.

ஆக பசிபிக் கடலின் ஆசிய நாடுகளின் பகுதி வெப்பம் அதிகரிக்கும்,வங்கக்கடல் , அதற்கு தெற்கே உள்ள நில நடுக்கோட்டு இந்தியப் பெருங்கடல் வெப்பம் உயர்ந்து இருக்கும் என்பதால் 2024 செப்டம்பர்  முதல்  டிசம்பர் முடிய தென் சீனா கடல் நிகழ்வு வங்கக்கடலுக்கு வலுவாக வரும்.

வடகிழக்கு பருவமழை.
அக் 20,21,22 இல் தொடங்கும்.
இக்காலத்தில் வலுவான நிகழ்வுகள் வலுவான மழை தரும் வடகிழக்கு பருவமழை சராசரிக்கும் கூடுதல் தரும் என்றே தெரிகிறது.

ந. செல்வகுமார்
3.6.2024-4AM வெளியீடு

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog