தாழ்வு அமைவு காத்திருந்து கனமழை தரும். பொங்கல் வரை மழை உறுதி.

0

தாழ்வு அமைவு காத்திருந்து கனமழை தரும்.
பொங்கல் வரை மழை உறுதி.

வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி ரெண்டு, டிசம்பர் பத்தொன்பது, திங்கட்கிழமை, அதிகாலை நிலவரம், ஒரு நிமிட ஆய்வறிக்கை.


 காற்றழுத்த தாழ்வு பகுதி, இலங்கையின், தெற்கு தென்கிழக்கு பகுதியில, நீடித்துக் கொண்டிருக்கிறது. நிலநடுக்கோட்டைக்கு, தெற்கு பகுதியில், நீடித்துக் கொண்டிருக்கக்கூடிய, புயலானது, கோட்டை விட்டு, விலகி செல்ல இருக்கிற நிலையில, வடதுருவ குளிர் நிலையை, காற்றழுத்த தாழ்வு பகுதி வரை,சுழல  செய்து, பிறகு, தெற்கு நோக்கி இருக்கிற காரணத்தினாலே, குளிர்காற்று தமிழகம் வருகிறது. குளிர்காற்று வருகிற காரணத்தினாலே, மழைப்பொழிவு தாமதம் ஏற்படுகிறது. இருந்த போதிலும், இன்று மாலை, கடலோரப் பகுதிகள்ல, மழைப்பொழிவு தொடங்கும். இன்று இரவு, நாளை கடலோர மாவட்டங்கள்ல, மழைப்பொழிவு தொடங்கும்.


 இருபத்தி ஒண்ணு, இருபத்தி இரண்டு, இருபத்தி மூன்று தேதிகளிலே, தமிழகத்தின் அனைத்து மாவட்டகளிலும் மழை இருக்கும். கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள்ல கனமழை இருக்கும். Christmas அன்றும் மழை இருக்கும். Christmasக்கு பிறகு, இந்த நிகழ்வு, இங்கேயே நீடித்துக் கொண்டிருந்து, அடுத்த நிகழ்வோடு இணைந்திருந்து, தீவிரமடைந்து, தமிழகம் கரை கடந்து, அரபிக் கடலை நோக்கி நகரும். அரபிக்கடல்ல இருந்து, January மூன்றாம் தேதி வரை, கிழக்கு காற்றை இருத்து, மழைப்பொழிவை கொடுத்துக் கொண்டிருக்கும். பிறகு, அடுத்த நிகழ்வு, வரக்கூடிய, January மூன்றாம் தேதி, Andaman பகுதிக்கு வந்து, January, எட்டு தேதிக்கு மேல், தமிழகம் வந்து, மழைப்பொழிவு, பொங்கல் வரை கொடுக்கும். விரிவான அறிக்கையை, பார்த்து, பயன்பெறுங்கள்



2022 டிசம்பர் 19 திங்கட்கிழமை அதிகாலை ஆய்வறிக்கை:

சுமத்திர தீவு மற்றும் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் உருவான  தாழ்வுப்பகுதி இலங்கையை நெருங்கி விட்டது.

நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டுக்கு தெற்குப்புறம் , தென் அரைக்கோள தீவிர நிகழ்வு புயல்  வழக்கத்திற்கு மாறாக வட துருவ குளிரலையை ரஷ்யா, மங்கோலியா, சீனா ,தைவான் ,பிலிப்பைன்ஸ், வியட்நாம், கம்போடியா ,லாவோஸ், தாய்லாந்து, மியான்மர் ,மலேசியா ஆகிய நாடுகள் வழியாகவும் பசுபிக் பெருங்கடல் தென்சீனக்கிடல், தாய்லாந்து வளைகுடா வழியாகவும் அந்தமான் கடற் பகுதி வந்து பிறகு இலங்கை அருகே நீடித்துக் கொண்டிருக்க கூடிய தாழ்வு பகுதிக்கு வந்து நிலநடுக் கோட்டிற்கு தெற்கு புறம் நீடிக்கும் Dariyan cyclone க்குள் செல்கிறது.
இதனால் இலங்கை அருகே நிலை பெற்றிருக்கும் தாழ்வு பகுதிக்கு மிகுந்த வடதுருவ குளிர் காற்று வருவது மட்டுமல்லாமல் நிலநடுக்கோட்டுப் பகுதி வெப்பநீர் ஆவி காற்று இலங்கை தாழ்வு பகுதி கிடைக்கவில்லை. டிசம்பர் 20 நிலநடுக்கோட்டு தெற்கே உள்ள நிகழ்வு விலகி செல்லும் என்பதால் நிலநடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள வெப்பநீராவி கிடைக்க பெறும்.  பிறகு கிறிஸ்மஸுக்கு பின் வட துருவக் குளிரலை வருகை தடைபடும்.

மழை எதிர்பார்ப்பு
டிசம்பர் 19 திங்கள் மதியம் மாலை கடலோரம் தூறல் நனைக்கும் மழை ஆங்காங்கே இருக்கும்.

டிசம்பர் 19 திங்கள் மாலைக்குப் பிறகு டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் கடலோர பகுதிகளில் லேசான மழை தொடங்கும். அதே நேரத்தில் வடகடலோரமும் லேசான மழை பொழிவு காணப்படும்.
டிசம்பர் 20 21 22 23 செவ்வாய், புதன் வியாழன் வெள்ளி ஆகிய தினங்கள் நிலநடுக்கோட்டு வெப்ப நீராவி காற்று ஓரளவு கிடைக்கும் , அதே நேரத்தில் வட துருவ குளிரலை நிகழ்வுக்கு வந்த வண்ணம் இருக்கும். இதன் காரணமாக குளிர்ந்த சீதோசன நிலை காணப்படும், கடலோரம் அதிகாலை மழைப்பொழிவு காணப்படும். அனைத்து மாவட்டங்கள் மற்றும் கடலோரம் காலை 11 மணிக்கு மேல் மழை பொழிவு ஆங்காங்கே ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை கொடுக்கும் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
டிசம்பர் 20 21 22 23 ஆகிய தினங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழை இருக்கும் ஆனால் பெரும்பாலும் மதியம் மாலை இரவு நேரங்களில் இருக்கும். அதிகாலை காலை நேரங்களில் கடும் குளிர் நிலவும். கடலோரம் அதிகாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் குளிருக்கு இடையே மழை பொழிவு இருக்கும்.,
டிசம்பர் 24 25 ஆகிய தேதிகளிலும் நிகழ்வு தமிழகம் இலங்கை அருகே சற்று அப்பால் நீடித்துக் கொண்டிருக்கும் இதன் காரணமாக கடலோரம் மழை இருக்கும் ஆனால் தீவிரம் குறைந்து இருக்கும். உள்ளேயும் ஒரு சில இடங்களில் மழை பொழிவு காணப்படும்.
டிசம்பர் 26 புதிய சாதாரண நிகழ்வு இலங்கை அருகே நீடிக்கும் நிகழ்வுடன் வந்து இணையும் என்பதாலும், டிசம்பர் 26க்கு மேல் வட துருவ குளிரலை தாய்லாந்து வளைகுடாவில் நீடிக்கும் தாழ்வு நிலையுடன் நின்று விடும் என்பதாலும், நில நடுக்கோட்டு நிகழ்வு விலகி சென்று இருக்கும் என்பதாலும், வட துருவ குளிரலை வருகை தடைபடும், அதே நேரத்தில் நிலநடுக்கோட்டு வெப்பநீர் ஆவி கிடைக்க பெறும் இதன் காரணமாக டிசம்பர் 27 28 29 தேதிகளில் இலங்கை அருகே தாழ்வு பகுதி தீவிரமடைந்து இலங்கை கடந்து தென்தமிழகம் வழியாகவோ குமரி கடல் வழியாகவோ அரபிக்கடலை நோக்கி நகரும் இதனால் தமிழகத்தில் மழை பொழிவு மீண்டும் தீவிரமடையும், குறிப்பாக இலங்கை தென் தமிழகம் டெல்டா மாவட்டங்கள் மத்திய உள் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் நல்ல மழை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
டிசம்பர் 31 வரை அரபிக் கடலுக்கும் சென்று கிழக்கு காற்றை ஈர்த்து ஜனவரி 2 வரை மழை பொழிவு தரும்.
ஜனவரி 3  முதல் 5 வரை இடைவெளி கிடைக்கும். ஜனவரி 7 இல் புதிய நிகழ்வு வந்து ஜனவரி 14 வரை மழை பொழிவை தரும்.

ஏற்கனவே சென்னை அருகே தாழ்வு பகுதி நவம்பரில் வந்த போது இதே குளிர் அலை நுழைந்து சென்னையை ஊட்டி போல குளிர் ஆக்கியது. ஆனால் அந்த குளிர் விலகி அடுத்து மான்டோஸ் வந்தது. குளிரலை இடைக்கால இடையூறு மட்டுமே ,இருந்தபோதிலும் மழை பொழிவு இருக்கும். குறைவாக பொழியும். மீண்டும் டிசம்பர் 26க்கு மேல் தீவிரமடைந்து மழை பொழிவை கொடுக்கும் நம்பிக்கையுடன் இருங்கள்.
தற்போதுள்ள நிகழ்வால் ஜனவரி 3 வரை மழை பொழிவு கிடைக்க, அடுத்த நிகழ்வால் ஜனவரி 6 முதல் 14 வரை மழைப்பொழிவு கிடைக்க, அதற்குப் பிறகும் நிகழ்வுகள் தென் மாவட்டங்கள் இலங்கைக்கு மழை பொழிவு கொடுக்க ஜனவரி 20 வரை மழைப்பொழிவு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு திட்டமிட்ட வேளாண்மை செய்ய அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
ந.செல்வகுமார்.


Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform



Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog